கரூர் ஐடி ரெய்டில் தாக்கப்பட்ட அதிகாரி.. யார் இந்த காயத்ரி.. உங்களுக்கு நினைவிருக்கா?

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் ஐ.டி ரெய்டின் போது தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, முன்னாள் தடகள வீராங்கனை ஆவார். கடந்த 2008-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றவர் ஆவார்.

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது தாக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 அதிகாரிகளும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

who is the Income Tax officer Gayathri? How sports women turned into IT Officer?

இந்நிலையில் வருமான வரித்துறை காயத்ரி தடகளத்தில் பல சாதனைகளைப் புரிந்தவர் என்பது அவரது புகைப்படத்தை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தேடிய போது யார் என்பது தெரியவந்தது.

அரியலூரைப் பூர்வீகமாகக் கொண்ட காயத்ரி, ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட போதும், பள்ளி காலத்திலேயே தடகளத்தில் ஜொலித்தவர். படிப்பிலும் படு கெட்டிக்காரரான காயத்ரி 12ம் வகுப்பில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம், 2016ல் அஸ்ஸாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் ஆவார்.

who is the Income Tax officer Gayathri? How sports women turned into IT Officer?

கடந்த 2008-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வாங்கி இருக்கிறார்.

தடகள விளையாட்டுப் போட்டி சாதனைகள் மூலம் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட காயத்ரி, கரூருக்குச் சோதனை நடத்த வந்த இடத்தில் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு நேற்று சேர்க்கப்பட்டார்.

who is the Income Tax officer Gayathri? How sports women turned into IT Officer?

நேற்று காயத்ரி உள்ளிட்ட அதிகாரிகளை கரூரில் சோதனைக்கு வந்த போது,வீட்டிற்குள் நுழையும் முன்பாக ஐடி கார்டு கேட்டு சிலர் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவிய போது தான் யார் என்பது குறித்து தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+