Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலைக்கு நடந்த கசப்பான சம்பவம்.. செந்தில் பாலாஜிக்கு எதிரானது எப்படி.. திருச்சி சூர்யா பேட்டி

Subscribe to Oneindia Tamil

கரூர்: ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் களம் இறங்கினார். தனது சொந்த தொகுதியான அரவக்குறிச்சியில் களம் இறங்கினார். ஆனால் செந்தில் பாலாஜியின் வியூகத்தால் அண்ணாமலை தோற்கடிக்கப்பட்டார். கரூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் 2021ல் திமுகவே வென்றது.அதன்பிறகு கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுவாக்கிய செந்தில் பாலாஜி.. அடுத்தடுத்து சிக்கலை எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்து திருச்சி சூர்யா கூறியுள்ளார். டெல்லியின் கவனத்தை செந்தில் பாலாஜியின் பக்கம் அண்ணாமலை தான் திருப்பியதாகவும் கூறியுள்ளார்

ஊடகம் ஒன்றுக்கு திருச்சி சூர்யா சிவா அளித்த நேர்காணலில் கூறுகையில், செந்தில் பாலாஜியும், அண்ணாமலையும் ஒரே சாதி. அவர்கள் இருவருடைய அம்மாவும் அக்காள் தங்கை உறவு முறையில் வருபவர்கள். அப்புறம் எப்படி இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கேட்கிறீர்களா..

Why did Annamalai turn Delhi s attention towards Senthil Balaji Trichy Surya interview

எப்போதுமே தன் கட்சி சார்ந்த வேட்பாளர்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி விரும்புவார் . ஆனால் அண்ணாமலை அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் நிற்கும் போது, அவரை செந்தில் பாலாஜி தோற்கடிக்கிறார்.. இந்த இடத்தில் இருந்து தான் இருவருக்கும் மோதல் ஆரம்பம் ஆகிறது.

அண்ணாமலை செந்தில் பாலாஜி ஒரே பங்காளிகள்

அண்ணாமலை, செந்தில் பாலாஜி, இருவருக்குமே ஒரே குல தெய்வம், ஒரே கிராமம்.. ஒரே ஜாதிக்குள்ளேயே இருக்கும் ஒரே வகையறா ஆட்கள் இவர்கள்.. இருவரும் அங்காளி பங்காளி ஆவர்.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி அரசியல் ரீதியாக தோல்வியை தேடித்தந்ததால்.. சொந்த ஊரில் வந்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி நிற்கும் போது.. பதவியில் இருந்து விலகிவிட்டு வருகிறார் இளைஞர்.. அப்படீன்ற பார்வையில் ஸ்கோர் செய்துவிடலாம் என்று நினைத்ததை.. செந்தில் பாலாஜி காலி பண்ணிவிட்டார் என்ற கோபம் இருந்தது.

செந்தில் பாலாஜி வைத்த விமர்சனங்கள்

அதற்கு அப்பாற்பட்டு செந்தில் பாலாஜி, அண்ணாமலை மீது ரபேல் வாட்ச், ஏர்போர்டில் கதவை திறந்தார்.. அவருடைய சொத்து பட்டியலை வெளியிட தயாரா.. அண்ணாமலை தங்கியுள்ள வீட்டின் வாடகை 3 லட்சம்.. யார் வாடகை தருகிறார் என்று கேட்டது. அதனை நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்று அண்ணாமலையை சொல்ல வைத்தது.. என அண்ணாமலை குறித்து இமேஜை பொது ஊடகங்களிலும், பொதுவெளியிலும் டேமேஜ் செய்யும் வகையில் செந்தில் பாலாஜியின் விமர்சனங்கள் கடுமையாக இருந்தது..

அண்ணாமலை வைத்த வாதம்

இதனால் அண்ணாமலை என்ன செய்கிறார் என்றால்.. டெல்லிக்கு போய் பேசும் போது, கொங்கு பகுதியில் திமுகவிற்கு வலுவான தலைவர்கள் யாருமே இல்லை. செந்தில் பாலாஜி வந்த பிறகு தான் கொங்கு மண்டலத்தில் திமுக ஸ்ட்ராங் ஆகிவிட்டது.. ஈரோடு முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன் இருக்கிறார்கள் என்றால் , அவரவர், அவர்களின் தொகுதிக்குள்ளாகவே வலுவாக இருக்கிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தையே திமுகவின் கோட்டையாக மாற்றிவிட்டார் என்று கூறியிருக்கிறார்..

செந்தில் பாலாஜிக்கு எதிராக அண்ணாமலை

அப்போது டெல்லி தலைமை அவரிடம் எப்படி செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றினார் என்று கேட்டுள்ளது. அதற்கு அண்ணாமலை, செந்தில் பாலாஜிக்கு பணம் கன்னாபின்னா என்று கொட்டுது.. அவர் இரு பெரிய துறைகளின் அமைச்சராக உள்ளார். டாஸ்மாக், மின்சார வாரியம் இரு துறைகளின் அமைச்சராக இருக்கிறார்..

பணம் கொட்டுது

கோடிக்கணக்கில் கொட்டுது.. அதனால் பணத்தை இரைக்கிறார்.. இப்ப நீங்கள் செந்தில் பாலாஜியை தூக்கிவிட்டால், பணம் நின்றுவிடும்.. யாரும் பார்த்துக் கொள்ள முடியாது.. அப்ப கொங்கு பகுதி திமுகவிற்கு பலவீனமாகும் என்று கூறியிருக்கிறார்" என திருச்சி சூர்யா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அந்த வீடியோவை திருச்சி சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+