ஸ்டாலின், செந்தில் பாலாஜி பற்றி அவதூறு.. அதிமுக ஐடி விங் நிர்வாகியை தூக்கி உள்ளே வைத்த போலீசார்!
கரூர்: முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து யூடியூப் சேனலில் அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகி பசுபதி செந்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கட்சி நிர்வாகிகள் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சியினரும், எதிர்க்கட்சியினரை திமுக கூட்டணியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சில நேரங்களில் வரம்பு மீறி அவதூறு செய்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில், அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி செந்தில் (50). இவர் அதிமுக ஈரோடு மண்டல சமூக வலைதள பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து யூடியூப்பில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திமுகவினர் அளித்த புகாரைத் தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் பிப்.11 ஆம் தேதி பசுபதி செந்தில் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பசுபதி செந்திலை பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதை அடுத்து அவரை கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், பசுபதி செந்தில் பேசியதை ஓளிப்பரப்பு செய்த யூடியூப் ஐபி முகவரிக்கு சொந்தமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications