ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொடூர விபத்து.. அடுத்தடுத்து மோதிய 10 வாகனங்கள்.. 3 பேர் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தின் காரணமாக ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் இருபுறமும் சென்று வருகின்றன. கர்நாடக மாநிலம் செல்வதற்கு இந்த சாலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஓசூர் டூ கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை குருபரப்பள்ளி அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது.

குருபரப்பள்ளி அருகே சாலை அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலை அமைக்கும் பணியின் காரணமாக இந்த பகுதியில் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இன்று வாகனங்கள் அனைத்தும் மெதுவாகவே சென்றுகொண்டிருந்தன.
அப்போது இந்த சாலையில் வந்த கேரளாவை சேர்ந்த மினி கண்டெய்னர் லாரி மிக மெதுவாக நகர்ந்துள்ளது. சாலை அமைக்கும் பணி காரணமாக மெதுவாக வந்துள்ளது. இந்த லாரிக்கு பின்னால் இரண்டு கார்கள் வேகமாக வந்துள்ளன. இந்த கார்களுக்கு பின்னால் ஒரு சரக்கு லாரி வந்துள்ளது. அந்த லாரி இரண்டு கார்கள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் கார்கள் இரண்டும் முன்னால் சென்ற மினி கண்டெய்னர் லாரி மீது மோதி சிக்கிக்கொண்டது.
இதில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இரண்டு லாரிகளுக்கும் இடையே கார் சிக்கிக் கொண்டு நசுங்கியுள்ளது. இதேபோன்று கண்டெய்னர் லாரியும் சாலைக்கு மறுபுறம் பாய்ந்தது. இதற்கிடையே லாரி மீது மேலும் சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு ஆட்டோ, இரண்டு கார்கள், இரண்டு லாரி உள்பட மொத்தம் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து போலீசார், மீட்பு படையினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இந்த விபத்தின் காரணமாக கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications