10 வயசு பிஞ்சு.. மலையடிவாரத்தில் ஷாக்.. மொட்டை அடித்து.. மிளகாய்தூள் திணித்து, உடம்பெல்லாம்.. கொடுமை

கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: மிக கொடூரமான கொலை ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.. 10 வயசு பிஞ்சு, உயிர் பிரியும் தருணத்தில் எப்படியெல்லாம் துடி துடிச்சிருப்பானோ என்று மனம் பதைபதைக்கிறது.

பர்கூர் அடுத்த கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லை செல்லும் வழியில் மல்லேஸ்வரன் என்ற பகுதி உள்ளது.. இது மலைப்பகுதி..

இந்த மலையை சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன.. இந்த மக்கள், அந்த மலைஅடிவாரத்திற்கு விறகு சேகரிப்பதற்காக அடிக்கடி செல்வது வழக்கம்.

சடலம்

சடலம்

அப்படித்தான், நேற்று அந்த பகுதி மக்கள் சென்றுள்ளனர்.. அங்கே 10 வயது சிறுவன் சடலமாக கிடந்திருப்பதை கண்டு அலறினர்.. உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து வந்தனர். சடலத்தை மீட்க வந்த போலீசார், ஒரு கணம் அதிர்ந்து போய் விட்டனர். இவ்வளவு கொடூரமாக எந்த கொலையும் அந்த பகுதியில் இதுவரை நடந்தது இல்லையாம்.

மொட்டை

மொட்டை

அந்த சிறுவனின் உடம்பெல்லாம் பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறது.. அதற்கான ரத்த காயங்கள் ஆங்காங்கே சிவந்து கிடந்துள்ளன.. அவன் தலை முழுவதுமாக மொட்டையடிக்கப்பட்டுள்ளது.. அவன் வாயில் மிளகாய் பொடியை திணித்து அடைத்துள்ளனர்.. அவனது மார்பு, கை, கால்கள் என மொத்த இடமும் நெருப்பால் சுடப்பட்டுள்ளது.. உடம்பு முழுவதும் நெருப்பாலேயே பொசுக்கி கொன்றார்களா என்றுகூட தெரியவில்லை.

 வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

ஆனால் சிறுவன் அந்த பகுதியை சேர்ந்தவன் இல்லையாம்... யார் என்பதற்கான அடையாளமும் உடனடியாக கிடைக்கவில்லை.. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் மோப்பநாய் வரவழைத்தனர்.. தடயவியல் துறை அதிகாரிகளையும் வரவழைத்தும் சோதனை மேற்கொண்டனர்... சிறுவன் இறந்த தகவல் தெரிந்ததும், அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்தபடியே இருந்தனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இதையடுத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.. வேறு பகுதியில் 10 வயதில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்ற தகவலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.. இந்த அளவுக்கு கொடூரமாக 10 வயசு பிஞ்சுவை யார் கொன்றிருப்பார்கள்? சித்ரவதை செய்தே கொன்ற மிருகம், நிச்சயம் ஒரு சைக்கோவாகத்தான் இருக்க முடியும்.. இந்த சம்பவத்தின் பரபரப்பு கிருஷ்ணகிரி பகுதியில் இன்னும் அடங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+