கிருஷ்ணகிரியில் ஜனனி பூட்டிய அறையில் இருந்த கோலம்.. கனவுகளை தொலைத்த காதல் தம்பதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த லோகேஷ் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜனனி போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்ததாம்.இந்த சூழலில் ஜனனி எடுத்த முடிவும், அவரது கணவர் செய்த வேலையும் மொத்த குடும்பத்தையும் அதிர வைத்துள்ளது.
காதல் திருமணம் செய்யும் இளம் ஜோடிகள், பெற்றோரை எதிர்த்து, உறவினர்களை எதிர்த்து வாழ்ந்து கட்டுவோம் என்று வீர வசனத்துடன் தனியாக வசிக்கிறார்கள். ஆனால் பின்னாளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எளிதானது அல்ல.. பெற்றோர் ஏற்றுக் கொள்ளாமல் போனால், பிரசவம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் நெருக்கடி உருவாக்கும். அதேபோல் நிதிநெருக்கடி, உறவில் ஏற்படும் குழப்பம், திடீரென எழும் சந்தேகங்கள் எல்லாமே காதல் திருமணம் செய்தவர்களுக்கு பயத்தை அதிகரிக்கும். அதேநேரம் பெற்றோர் ஆதரவு இருந்தால் எளிதாக இந்த பிரச்சனைகளை கடந்து போய்விட முடியும்.

அதேநேரம் காதல் திருமணத்திற்கு பெற்றோரின் ஆதரவு இருந்தாலும், கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்தால் சிக்கல் ஏற்படும். ஒருவரை ஒருவர் அடக்கி ஆள முயன்றாலோ, நீ என்ன சொல்வது, நான் ஏன் கேட்க வேண்டும் என்று ஈகோ உடன் சுற்றுவதாலும் காதல் திருமணங்களில் பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து மாறி மாறி விட்டுக்கொடுத்து சென்றால் சிக்கல் இருக்காது .. மாறாக விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை என்றால், சின்ன சின்ன சண்டை கூட பெரிய பிரச்சனையாக மாறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த 30 வயதாகும் லோகேஷ் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி ஜனனி (24) போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள மற்றொரு நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இவர்களுக்கு விக்னேஷ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. லோகேஷ்- ஜனனி தம்பதியின் ஆண் குழந்தையை ஜனனியின் பெற்றோர் பராமரித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக லோகேஷ்- ஜனனி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற லோகேஷ் இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லோகேஷ், கதவை உடைத்து கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
அங்கு வீட்டின் மேற்கூரையில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் ஜனனி அசைவற்று கிடந்தார். இதுகுறித்து ஜனனியின் பெற்றோருக்கு அழுதபடி செல்போனில் லோகேஷ் தகவல் தெரிவித்தார். அவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஜனனி வீட்டுக்கு வந்தனர். அங்கு ஜனனி உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவருக்கு அருகில் கையில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் லோகேஷ் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த லோகேசும், ஜனனியும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனித்தனி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தபோது போதுமான வருமானம் இல்லை. எனவே வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கலாம் என கணவரிடம், ஜனனி அடிக்கடி கூறினாராம். அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனாலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஜனனி உயிரை விட்டதாக கூறப்படுகிறது. மனைவி வாழ்க்கையை முடித்துக் கொண்டதை கண்ட லோகேஷ் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு உயிரைவிட முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications