ஒசூரில் மகனோடு எலக்ட்ரிக் பைக்கில் ஜாலி ரவுண்ட்... திடீரென பற்றி எரிந்த தீயால் பதற்றம்
ஒசூரில் மகனோடு எலக்ட்ரிக் பைக்கில் ஜாலி ரவுண்ட் சென்ற போது புகை கிளம்பி தீ பற்றிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மின்சார வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது பயன்படுத்தி வருவோரையும்,இனி வாங்க நினைப்பவர்களையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.
பெட்ரோல் டீசலின் விலை உயர்வு மக்களை மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்தி வருகின்றன. மின்சார பைக்களும், கார்களும் மக்களிடையே புழக்கத்தில் வந்துவிட்டன.சாலைகளில் பயணங்களின் போது முன்னர் எப்போதாவது தென்பட்ட மின்சார வாகனங்கள் இப்போது நிறையவே கண்ணில் படுகின்றன
போட்டி போட்டுக்கொண்டு மின்சார வாகன உற்பத்தியை நோக்கி நிறுவனங்கள் நகர்ந்து வரும் அதே வேளையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்சார வாகனங்கள் பற்றி எரிவதாக வரும் செய்திகள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்கள் அடுத்தடுத்து பற்றி எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார பைக்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி தனியார் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் சதீஸ்குமார்,
இவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா என்னும் இடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது இ-பைக்கில் ஒசூர் சென்று வருவது வழக்கம். தனது மகனை ஸ்கூட்டரில் வைத்து தினசரியும் ஜாலி ரவுண்ட் வருவாராம்.

வண்டியில் கிளம்பிய புகை
மின்சார பைக்கை ஓக்கினாவோ என்னும் கம்பெனியில் ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கி, உபயோகித்து வந்துள்ளார். இன்று காலை ஜூஜூவாடியில் இருந்து சதீஷ் இருக்கக்கூடிய தனியார் லேஅவுட் பகுதிக்கு தனது மகன் புகழை வைத்துக்கொண்டு ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது வண்டியில் இருந்து புகை கிளம்பியுள்ளது.

பற்றி எரிந்த பைக்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வண்டியை விட்டு கீழே இறங்கியுள்ளார். வண்டியில் இருந்து புகையானது அதிக அளவில் வெளியேறி, பின்பு தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

சேதமான பைக்
மின்சார பைக்கானது தீயில் எரிந்து முற்றியும் சேதமானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், இதுகுறித்து வாகனத்தை வாங்கிய ஷோரூமிற்கும், ஒசூர் சிப்காப்ட் காவல்நிலையத்திற்கும் புகார் அளித்தார். தமிழகத்தில் மின்சார பைக்குகள் அடிக்கடி எரிந்து சேதமாவது வாடிக்கையாகி வருகிறது.

தந்தை, மகள் பலி
கடந்த மாதம் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்ததில் தந்தையும்,13 வயதே ஆன அவரது மகளும் ஒரு சேர பலியான சம்பவம் பெருத்த சோகத்தையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எரிந்து நாசம்
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு வாங்கிய 90 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக் கடந்த மாதம் 28ஆம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அதே போல திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்தது.

பொதுமக்கள் அச்சம்
மின்சார வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது பயன்படுத்தி வருவோரையும்,இனி வாங்க நினைப்பவர்களையும் சற்று யோசிக்க வைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் மின்சார பைக் வாங்கும் பட்சத்தில் பேட்டரி சார்ஜ் செய்வது தொடங்கி பராமரிப்பு வரை சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டுமெனவும்,வாங்குவதற்கு முன்பாகவே மின்சார வாகன பயன்பாடு குறித்து தெரிந்து கொள்ளுதல் அவசியம் என அறிவுறுத்துகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications