கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் பெண் கூட்டு பலாத்காரம்! தப்பியோடிய நபரை சுட்டு பிடித்த போலீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக்கோட்டையின் உச்சியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சிக்கிய நபர் தப்பியோடிய போது போலீஸார் அவரை சுட்டு பிடித்தனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு மலை உள்ளது.இந்த மலைக்கு கடந்த 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருப்பத்தூரை சேர்ந்த 35 வயது ஆணும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றனர்.

அவர்கள் மலையின் உச்சிக்கு சென்ற போது அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது அந்த பெண்ணையும் ஆணையும் வழிமறித்த இவர்கள் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
தங்க நகை
மேலும் அந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளையும் பணத்தையும் பறித்துள்ளனர். அப்போது அந்த கும்பலில் இருந்த இருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணும் ஆணும் அழுது கொண்டே மலையில் இருந்து இறங்கி வந்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.
4 பேருக்கு தொடர்பு
இதுகுறித்து புகரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20), ஆகியோர் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரியவந்தது.
கொள்ளை அடித்தது யார்
கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் ஆகியோரும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் தனிப்படை அமைத்து தேடியதில் கலையரசனும் அபிஷேக்கும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான இருவர்
அது போல் தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை தேடி வந்த போது அவர்கள் கிருஷ்ணகிரி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்னால் பதுங்கி இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது.
கத்தியால் தாக்கிய இருவர்
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்ஐ பிரபாகர், காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகியோர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். போலீஸாரை கண்டதும் சுரேஷும் நாராயணனும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸாரை தாக்கினர். பின்னர் தப்பியோட முயன்ற போது போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவர் காயமடைந்தார்.
எஸ்.பி. ஆய்வு
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பி தங்கதுரை உள்ளிட்டோர் கத்திக்குத்துப்பட்ட காவலர் குமார், விஜயகுமார், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர்.
சுரேஷ் மீது இரு வழக்குகள்
இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. தங்கதுரை கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மலை பகுதிக்கு வந்த பெண்ணை மிரட்டி நகை, ரூ 14 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே 2 பேர் கைதாகிவிட்டனர். மேலும் பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் அருகே பதுங்கியிருந்த 2 பேரை பிடிக்கச் சென்ற போதுதான் போலீஸாரை அவர்கள் கத்தியால் தாக்கினர். அப்போது போலீஸார் தற்காப்புக்காக சுரேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அது போல் நாராயணன் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. கைதான சுரேஷ் மீது அடிதடி வழக்குகள் உள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தங்கதுரை எஸ்பி தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications