முதலில் ஆதார், இரண்டாவதாக பிறப்பு சான்றிதழ், மூன்றாவதாக கிருஷ்ணகிரி அரசு ஊழியர்.. இறுதியில் ட்விஸ்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வெங்கடாசலம் என்பவர் அத்தை மகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கினார். இதில் பிறந்த தேதி, பாலினம், தந்தை பெயர், தாய் பெயர், கிராம பெயர் ஆகியவை இருந்தன. ஆனால் பிரியதர்ஷினி என்ற மகளின் பெயர் சேர்க்கப்படாமல் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்காக அணுகிய போது, ரூ.3,500 லஞ்சம் வாங்கிய புகாரில் ஊத்தங்கரை தாலுகா அலுவலக ஊழியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்தால் தான் இன்றைக்கு ஆதார் கிடைப்பது எளிதாகும். பிறப்பு சான்றிதழில் பெயரில் இனிஷில் சிக்கல் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது எழுத்து தவறாக இருந்தால் கண்டிப்பாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பான் கார்டு வாங்குவதில் தொடங்கி, வங்கி கணக்கு, பாஸ்போர்ட், பள்ளியில் சான்றிதழ் என அனைத்திலும் சிக்கல் வரும். அதேபோல் சிலர் பெயர் இல்லாமல் பிறப்பு சான்றிதழ் வாங்கி சென்றிருப்பார்கள். அவர்கள் பெயரை சேர்க்க இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் கேட்டதாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தை மகளுக்கு சிக்கல்
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சந்தப்பட்டி அருகே கோட்ரப்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் வெங்கடாசலம் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய அத்தை லட்சுமி. இவர் சந்தப்பட்டியில் குடியிருந்து வருகிறார். லட்சுமியின் மகள் பிரியதர்ஷினிக்கு 18 வயது ஆகிறது. இவரது ஆதார் கார்டில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
ஆதார் கார்டில் பிறந்த தேதி மாற்றம்
இதனால் ஆதார் கார்டில் பிறந்த தேதி மாற்றம் செய்ய அவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளாரக்ள. அப்போது அவர்கள் பிறப்பு சான்றிதழ் இருந்தால் தான் பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள். இதையடுத்து வெங்கடாசலம் ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் வாங்கினார். இதில் பிறந்த தேதி, பாலினம், தந்தை பெயர், தாய் பெயர், கிராம பெயர் ஆகியவை இருந்தன. ஆனால் பிரியதர்ஷினி பெயர் சேர்க்கப்படாமல் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இ-சேவை மையம்
இதைத் தொடர்ந்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்காக கடந்த 25-ந் தேதி கிருஷ்ணகிரியில் இ-சேவை மையத்தில் ஆன்லைன் மூலமாக ரூ.200 அரசுக்கு செலுத்தி பதிவு செய்தார். தொடர்ந்து பிறப்பு சான்றிதழில் பிரியதர்ஷினியின் பெயர் சேர்க்க விண்ணப்பம் ஒன்றை தயார் செய்த வெங்கடாசலம் அத்துடன் ஆவணங்களை இணைத்து கடந்த ஜூலை 30ம் தேதி ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இளநிலை உதவியாளர் ஜெய்கணேஷ் என்பவரிடம் விண்ணப்பத்தை கொடுத்திருக்கிறாராம்.
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க
இதையடுத்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.4,500 கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். வெங்கடாசலம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். தொடர்ந்து ரூ.4 ஆயிரம் தந்தால் வேலை நடக்கும் என கூறினார். இதன்பிறகு நேற்று முன்தினம் மதியம் மீண்டும் ஜெய்கணேசை சந்தித்து கேட்ட போது அவ்வளவு பணம் என்னால் தர முடியாது என வெங்கடாசலம் கூறினார். தொடர்ந்து ரூ.3,500 கொடுத்தால் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்து தர ஏற்பாடு செய்வேன் என்று கறாராக கூறினார்.
லஞ்ச பணம்
இந்த லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத வெங்கடாசலம் நேற்று காலை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரவியிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடாசலம் கொண்டு சென்றுள்ளார்.
கையும் களவுமாக பிடித்தனர்
அதை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் ஜெய்கணேசிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி (பொறுப்பு) நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் ஜெய்கணேஷை கையும், களவுமாக கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்து சில ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications