கஞ்சா பிடித்தபடி 'ரீல்ஸ்'.. தானாக வந்து சிக்கிய "சில்வண்டு" - கொத்தோடு தூக்கிய கிருஷ்ணகிரி போலீஸ்
கிருஷ்ணகிரி: கஞ்சா வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், பேருந்து நிலைய கழிவறையில் கஞ்சா புகைத்துக்கொண்டு 'ரீல்ஸ்' வீடியோ செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், வாண்ட்டடாக வந்து சிக்கிய சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. கஞ்சா புகைத்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் போலீஸார் அவரது செல்போனை சோதனை செய்து பாரத்த போது, பட்டா கத்தியை காட்டியும், போலீஸாரை மிரட்டுவது போலவும் அவர் பல 'ரீல்ஸ்' வீடியோக்களை செய்தது தெரியவந்தது.
மேலும், கஞ்சா கும்பலுடனும் அவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இளைஞர்களை சீரழிக்கும் 'ரீல்ஸ்' மோகம்
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒருபுறம் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க, மறுபுறம் அவற்றால் ஆபத்துகளும் விபரீதங்களும் உருவாகிக் கொண்டிருப்தை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, இன்றைய தலைமுறை இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களுள் மூழ்கி தங்கள் வாழ்க்கை இழந்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், இவற்றால்தான் நாம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது கூட அவர்களுக்கு புரிவதில்லை. எதற்கும் பிரயோஜனப்படாத 'லைக்ஸ்'களுக்காக சில இளைஞர்கள் செய்யும் செயல் அவர்களை பேராபத்தில் தள்ளிவிட்டு விடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் கிருஷ்ணகிரியில் நடந்திருக்கிறது.

காட்டிக் கொடுத்த புகை
கிருஷ்ணகிரியில் உள்ள பழைய பேட்டை பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று போலீஸார் பழைய பேட்டை பேருந்து நிலையத்தில் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் வருவதை அறிந்து, கஞ்சா விற்கும் கும்பல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டது. இந்நிலையில், அங்குள்ள பேருந்து நிலையத்தின் கழிவறையில் இருந்து குபுகுபுவென புகை வந்து கொண்டிருந்தது.

கஞ்சா புகைத்தப்படி 'ரீல்ஸ்'
இதையடுத்து, அங்கு சென்று பார்த்த போது கஞ்சா புகைத்தப்படியும், சினிமா வசனங்களுக்கு வாய் அசைத்தபடியும் ஒரு இளைஞர் ரீல்ஸ் வீடியோ செய்து கொண்டிருந்தார். வான்ட்டடாக வந்து மாட்டிய அந்த இளைஞரை கொத்தோடு தூக்கிய போலீஸார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அந்த இளைஞர், பழைய பேட்டை கொத்தபட்டா காலனியைச் சேர்ந்த அசோக் (21) என்பது தெரியவந்தது.

"சிறப்பான கவனிப்பு"
இதையடுத்து, அவரது செல்போனை பார்த்த போது அதில் அவர் கஞ்சா புகைத்தப்படி பல ரீல்ஸ் வீடியோக்களை செய்திருந்தது தெரியவந்தது. மேலும், போலீஸாரை மிரட்டுவது போலவும், ஒரு பெரிய தாதாவாக தன்னை காட்டிக் கொண்டும் பல ரீல்ஸ் வீடியோக்களை அசோக் செய்திருந்ததை போலீஸார் பார்த்தனர். விசாரணையில், ரீல்ஸ் வீடியோவில் அதிக லைக்ஸ் பெறுவதற்காகவே தொடர்ந்து அவர் கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் நிலையத்தில் அவரை போலீஸார் சிறப்பாக கவனித்ததுடன், அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications