கிருஷ்ணகிரி சுகன்யா + விழுப்புரம் விஜி.. கிறுகிறுத்த புருஷன்கள்.. அதுக்குனு இப்படியா..விக்கித்த ஜனம்
கிருஷ்ணகிரி: மனைவிமார்களால் 2 கணவன்களும் நொந்து போய்விட்டார்கள்.. ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்.. இன்னொருவர் விழுப்புரத்தை சேர்ந்தவர்.. இரு வேறு சம்பவங்கள் இதுவென்றாலும், உச்சக்கட்டமாக நொந்துபோன இந்த கணவன்களை பற்றி தான் 2 நாட்களாக செய்திகள் வைரலாகி கொண்டிருக்கின்றன.
விழுப்புரம் தக்காதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.. 42 வயாகிறது.. இவரது மனைவி பெயர் விஜி.. கோலியனூர் பகுதியை சேர்ந்தவராம்.. இவர்களுக்கு கடந்த 2017ல் கல்யாணம் நடந்துள்ளது.

யார் இவர்கள்: ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன.. அதனால், கடந்த 2021ல் வெங்கடேசனை விட்டு விஜி பிரிந்து சென்றுவிட்டார். அத்துடன், கன்னியப்பன் என்பவரை 2வது கல்யாணமும் செய்து, குடும்பம் நடத்த துவங்கிவிட்டார்.
இது வெங்கடேசனுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.. கடந்த 2 வருடமாகவே இந்த கோபம் அதிகமாகிவிட்டது. இதனால், விஜி மீது குற்றம்சாட்டி, நேற்று திடீரென ஊருக்குள் போஸ்டர்களை ஒட்டினார்..
தம்பதி விருந்து: அதில், விஜியுடன் கல்யாணத்தின்போது எடுத்துக்கொண்ட தங்களது போட்டோவையும், தம்பதி சமேதமாக ஒன்றாக உட்கார்ந்து விருந்து சாப்பிடும் போட்டோக்களையும் போஸ்டரில் பதிவிட்டார்..
"விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடமாகி 2 மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளது... இவர் என்னிடமிருந்து 20 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிக்கொண்டுவிட்டார். இப்போது கோலியனூரை சேர்ந்த கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார். என் உயிருக்கும் ஆபத்தாக உள்ளது" என்று அச்சிட்டு, ஊர் முழுக்க ஒட்டிவிட்டார்.
பேனர்கள்: இந்த போஸ்டர்கள் விஜியின் பார்வைக்கு சென்றது.. அதில் உள்ள வாசகங்களை பார்த்து விஜி அதிர்ந்துவிட்டார்.. 2வது கல்யாணம் ஆகி 2 வருடம் ஆன நிலையில், இப்போது போஸ்டரை ஒட்டியுள்ளாரே என்று ஆத்திரம் அடைந்தார்..
மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், தன்னுடைய வீட்டிற்கு வந்து அடிக்கடி பிரச்சனை செய்து கொண்டிருக்கும் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வளவனூர் போலீஸில் விஜி புகார் தந்துள்ளார்.. போலீசாரும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, இன்னொரு சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.. கிருஷ்ணகிரி அருகே, பெத்ததாளாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேதுராம்.. இவருக்கு 44 வயதாகிறது.. ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் சுகன்யா.. 34 வயதாகிறது.. இவரும் ஒரு கம்பெனியில் ஆடிட்டராக வேலைப்பார்க்கிறார்.
டைவர்ஸ் நோட்டீஸ்: இந்த தம்பதிக்கும், கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை இருந்து வந்திருக்கிறது.. வாழ்க்கையே வெறுத்துப்போன சுகன்யாவும், கடந்த 10 மாதத்துக்கு முன்பேயே, அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்..
அத்துடன், விவாகரத்து கேட்டு நோட்டீசும் அனுப்பினார்.. சுகன்யாவை போலவே, மனவேதனையடைந்த சேதுராமும், விவாகரத்து கோரினார்.. இவர்களது டைவர்ஸ் வழக்கு, கிருஷ்ணகிரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், திடீரென சுகன்யா இறந்துவிட்டதாக, ஊருக்குள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருநத்ன.. கிருஷ்ணகிரி நகர் ஆர்.சி.சர்ச் அருகிலும், பழையபேட்டை காந்தி சிலை அருகிலும், இன்னும் பிற இடங்களிலும், சுகன்யா இறந்து விட்டதாக பெரிய அளவிலான பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன..
இதைப்பார்த்து, சுகன்யா குடும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்து சுகன்யா வீட்டுக்கு ஓடினார்கள்.. பிறகுதான், வீட்டில் சுகன்யா இருப்பதை பார்த்து நிம்மதியடைந்து, பேனர் விஷயத்தை அவரிடம் சொன்னார்கள்..
விசாரணைகள்: இதைக்கேட்டு, சுகன்யாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் தந்தார்.. உயிருடன் இருக்கும் தன்னை பற்றி இப்படி போஸ்டர்கள், பேனர்கள் வைத்தது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.. கிருஷ்ணகிரி டவுன் போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
ஆக, 2 ஊர்களிலும், 2 கணவன்கள் மீது மனைவிகள் புகார்கள் தந்ததையடுத்து,குறித்து விசாரணைகள் துவங்கியுள்ளன.. விசாரணையின் பிடியில் கணவர்களும் சிக்கி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications