பாடிக்கொண்டு இருக்கும் போதே நடந்த சம்பவம்.. முட்டாபய.. கிறுக்குபய.. மைக்கில் கோபமாக கத்திய சீமான்!
கிருஷ்ணகிரி : நேற்று கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டுப் பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார் சீமான். இந்த பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் போய் மைக் சின்னம் வந்தாலும் கூட அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போகாமல் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றன.

சீமான் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.
சின்னம் போனாலும் கவலை இல்லை: ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் போய் மைக் சின்னம் வந்தாலும் கூட அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போகாமல் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றன. சின்னம் போனாலும் கவலை இல்லை என்று மைக் சின்னத்தை வைத்து அக்கட்சி பிரச்சாரம் செய்கிறது.
சின்னம் மாற்றம் காரணமாக நாம் தமிழருக்கு சிக்கல் இல்லை. கடந்த முறை எடுத்த 4 சதவிகித வாக்குகளுக்கு ஊறு ஏற்படாது. அது கண்டிப்பாக அப்படியே கிடைக்கும் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சாரத்தில் என்ன பேசினார்: நேற்று கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டுப் பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார் சீமான். இந்த பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அவர் பிரச்சாரத்தில் பேசுகையில், ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.
அனைத்து இடங்களிலும் தான் காசு கொடுப்பார்கள். தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோம் என்று சொன்னவர் தம்பி அண்ணாமலை. இப்போது அண்ணாமலைதான் ரூ4 கோடி பிடிபட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும் என்று பேசினார். அதேபோல் திராவிட கட்சிகளும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதாக வசைபாடினார்.
மேடையில் ஏறி தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை முட்டாப்**ங்க என்று திட்டிய சீமான் 🤣 pic.twitter.com/DiK5ZCHbi2
— கபிலன் (@_kabilans) April 7, 2024
இதை தொடர்ந்து வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டுப் பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார் சீமான். அவர் பாடிக்கொண்டு இருக்கும் போது மேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் அவருடன் போட்டோ எடுக்க முயன்றார். சீமான் சீரியஸாக பாடிய போது மேடையில் ஏறிய அந்த இளைஞர், போட்டோ எடுக்க முயன்றார்.
இதனால் கோபம் அடைந்த முட்டாபய.. கிறுக்குபய.. அவன் பிரச்சனை அவனுக்கு.. போட்டோ எடுக்க பார்க்குறான் என்று கடுமையாக சீமான் வசைபாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications