Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரியில் விரும்பிய மாமன் மகளுக்காக.. எந்த இளைஞனும் செய்யக்கூடாத முட்டாள்தனமான காரியம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இளைஞர் ஒருவர், தான் விரும்பிய மாமன் மகளுக்கு இன்று வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததால் மொத்த ஊரையும் ஆடிப் போக வைத்துள்ளார். தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரிகளும் காவல்துறையினரும் வந்து இரண்டு மணி நேரம் சமாதானம் செய்த பிறகு அவர் நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இன்றைக்கு காதலுக்காக இளைஞர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களை மட்டும் இல்லாமல் அவர்களை உறவினர்களையும் பாதிக்கிறது. சில நேரத்தில் அரசாங்கத்தையும் சேர்த்தே அவர்களது தவறான செயல்கள் பாதிக்கிறது. தான் விரும்பிய மாமன் மகள் தனக்கு கிடைக்காமல் போகும் நிலை வந்தவுடன், ஒரு இளைஞர் செய்த செயல் போச்சம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.

Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (28). இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த இவரது மாமன் மகள் மீது காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாமன் மகளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், கோபமடைந்த ஜெகநாதன் வேங்கனூர் கிராமத்தில் உள்ள 400 கிலோ வாட் உயர் மின் அழுத்தம் கொண்ட சுமார் 125 அடி உயரம் கொண்ட உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

காலை 7 மணி முதல் உயர் மின் கோபுரத்தின் மீது இருந்தவரை கிராம மக்கள் கவனித்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் நீண்ட நேரம் சமாதானம் செய்தும் அவர் சமாதானம் அடையாமல் இருந்து வந்தார். பிறகு மத்தூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இளைஞரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதில், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மாமன் மகளுக்காக இளைஞர் செய்த முட்டாள்தனமான பாச போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+