ஓசூர், தர்மபுரி மார்க்கத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம்.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: பெங்களூரு-ஓசூர் மார்க்கத்தில் பெலந்தூர் சாலை-கார்மெலராம் ரயில் நிலையங்களுக்கு இடையே 2-வது தண்டவாள பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி பெங்களூரு-ஓசூர், தர்மபுரி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் சேவையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்

ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பெங்களூரு-ஓசூர் மார்க்கத்தில் பெலந்தூர் சாலை-கார்மெலராம் ரயில் நிலையங்களுக்கு இடையே 2-வது தண்டவாள பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி பெங்களூரு-ஓசூர், தர்மபுரி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் சேவையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12677) கார்மெலராம், ஓசூர் வழியாக செல்லாமல் பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்தூர், சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும்.

Hosur train Dharmapuri

இதேபோல் பெங்களூரு-காரைக்கால் ரயில் (வண்டி எண்-16529) கார்மெலராம், ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தர்மபுரி வழியாக செல்லாமல் பையப்பனஅள்ளி சேலம் வழியாக காரைக்கால் சென்றடையும்.

கோவை-பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20642) தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும்.

மறுமார்க்கமாக பெங்களூரு-கோவை கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20641) ஓசூர், தர்மபுரி வழியாக செல்லாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக கோவை சென்றடையும். கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 11014) தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக லோக்மான்ய திலக் ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

யஸ்வந்த்பூர்-சேலம் ரயில் (வண்டி 16211) பெலந்தூர், கார்மெலராம், ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தர்மபுரி ஆகிய வழியாக செல்லாமல் பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்தூர் வழியாக சேலம் வந்தடையும்." இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ரயில்வே வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16327) வருகிற நவம்பர் 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12695) வருகிற நவம்பர் 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12696) வருகிற நவம்பர் 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.

தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும் என்றும் இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+