லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. லண்டன் சொகுசு பங்களாவில் சீரம் சிஇஓ.. ஒரு வாரத்திற்கு வாடகை மட்டும் ரூ. 50 லட்சம்!

Google Oneindia Tamil News

லண்டன்: சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா லண்டனில் வாரம் 50,000 பவுண்டு (சுமார் 50 லட்ச ரூபாய்) வாடகையில் தங்குவதற்குச் சொகுசு பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

புனேவை மையமாகக் கொண்டுள்ள சீரம் நிறுவனத்தின் சிஇஓ-ஆக இருப்பவர் ஆதார் பூனவல்லா. இவரது சீரம் நிறுவனம் தான் உலகிலேயே அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது.

வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியைத் தான் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

சீரம் நிறுவனம்

சீரம் நிறுவனம்

கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்தே சீரம் நிறுவனத்தில் பண மழை தான். இந்தியாவுக்கு முதலில் சில லட்சம் தடுப்பூசிகளை மிகக் குறைந்த விலைக்குக் கொடுத்தது. ஆனால், அதன் பின்னர் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட டிஸ்கவுண்ட்டை குறைத்துவிட்டார்கள். அதேநேரம் பல்வேறு வெளிநாடுகளும் சீரம் நிறுவனத்திற்கு ஆர்டர்களை அள்ளி கொடுத்தன.

சொகுசு பங்களா

சொகுசு பங்களா

இதன் காரணமாக சீரம் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே பணம் கொழிக்கும் நிறுவனமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா லண்டனில் சொகுசு பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். பிரிட்டனில் வழக்கமாக இருக்கும் வீடுகளை விட 24 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த சொகுசு பங்களாவின் ஒரு வார வாடகை 50 ஆயிரம் பவுண்டுகளாகும்(சுமார் 50 லட்சம் ரூபாய்).

மிகப் பெரிய வீடு

மிகப் பெரிய வீடு

லண்டனுக்கு அருகே அமைந்துள்ள இந்த சொகுசு பங்களா, அப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய வீடாகும். இந்த சொகுசு பங்களாவில் தனியாக நீச்சல்குளம், பூங்கா உள்ளிட்டவையும் உள்ளது. பொருளாதார மந்த நிலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் லண்டனில் சொகுசு பங்களாக்களை வாடைக்கு எடுப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது. இந்த நிலையில் ஆதார் பூனவல்லாவின் இந்த டீல் லண்டன் கட்டுமானார்களுக்கு நம்பிக்கையை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து சீரம் நிறுவனத்தின் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வதில் பெயர்போன நிறுவனமான சீரம் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் பூனவல்லா குடும்பத்தினர் உலக கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

English summary
Seru CEO Adar Poonawalla agreed to rent a property in the UK for about 50,000 pounds ($69,000) a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X