தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்! வாழ்த்து சொன்ன போட்டோ தான் ஹைலைட்.. செம

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகார்ப்பூர்வ இல்லத்தில் அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை வெகுவிமரிசயைாக கொண்டாடினர். மேலும் அவர் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான போட்டோவை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக இருப்பவர் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 Britain Prime Minister Rishi Sunak celebrated Diwali with his wife

ரிஷி சுனக்கிற்கு இந்து மதம் மீது நம்பிக்கை உள்ளது. அவர் பகவத்கீதையை அடிக்கடி படிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கும் அவர் தனது மனைவியுடன் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு ஜி20 மாநாட்டுக்கு வந்திருந்த ரிஷி சுனக் டெல்லியில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்நிலையில் தான் இந்தியாவில் வரும் 11 ம் தேதி முதல் 15ம் தேதி வரை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் தான் பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் தனது தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். இதில் பிரிட்டனில் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ரிஷி சுனக்கும், அவரத மனைவி அக்சதா மூர்த்தியும் குத்துவிளக்கேற்றி தீபாவளியை மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

அதன்பிறகு இனிப்புகள் பரிமாறப்பட்டது. இந்த கொண்டாட்டம் தொடர்பான போட்டோக்கள் பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ரிஷி சுனக் தீபாவளி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரிஷி சுனக் கூறியுள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

 Britain Prime Minister Rishi Sunak celebrated Diwali with his wife

‛‛தீபாவளியையொட்டி பிரதமர் ரிஷி சுனக் இன்று இரவு இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை டவுனிங் தெருவுக்கு அழைத்து தீபாவளியை கொண்டாடினார். பிரிட்டன் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் சுபமான தீபாவளி வாழ்த்துகள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+