ராணி எலிசபெத்தின் பொது இறுதிச்சடங்கு நிறைவு.. வெளியேறிய அரசு குடும்பம்! நள்ளிரவில் உடல் அடக்கம்
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் உடலின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன், உலக தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு இம்மாத தொடக்கத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

ஸ்காட்லாந்தில் மறைவு
ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை விமானத்தில் லண்டன் புறப்பட்டார்

எலிசபெத்துக்கு அஞ்சலி
நேற்று லண்டன் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இருந்த வெஸ்ட்மினிஸ்டர் அரங்கம் சென்ற திரௌபதி முர்மு, தலைவர்களுக்கான மேடையில் ஏறி நின்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் அஞ்சலி செலுத்த வந்த உலக தலைவர்களுக்கான இரங்கல் குறிப்பு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

சிறப்பு பிராத்தனை
இந்த நிலையில் இன்று ராணி எலிசபெத்தின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வெல்லிங்டன் வளைவிலிருந்து ஊர்வலமாக விண்ட்ஸர் கோட்டைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு காண்டர்பரி பேராயர் மகாராணி எலிபெத்துக்கு சிறப்பு பிராத்தனை செய்தார். உடல் செல்லும் பாதையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நின்று அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு
இதனை அடுத்து அவரது உடல் அணிவகுப்பு மரியாதையுடன் தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மகாராணியின் மறைந்த கணவரும் இளவரசருமான பிலிப்பின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியில் ராணுவ அணிவகுப்புடன் உடல் தேவாலயத்துக்கு சுமந்து செல்லப்பட்டது. அங்கு அரசு குடும்ப பாரம்பரியத்தின் படி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் பிரிட்டன் அரச குடும்பத்தினர், உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வெளியேறிய அரசு குடும்பம்
பொது இறுதிச் சடங்கு நிறைவடைந்ததை தொடர்ந்து பிரிட்டன் அரசு குடும்பம் தேவாலயத்தில் இருந்து வெளியேறியது. மன்னர் சார்லஸ், ராணிகள் கமீலா, கன்சார்ட், இளவரசர்கள், எட்வர்ட், ஆண்ட்ரியூ, வில்லியம், ஹாரி, இளவரசி அன்னே ஆகியோர் தேவாலயத்திலிருந்து தனித்தனி கார்களில் புறப்பட்டனர். பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு 7:30 மணியளவில் குடும்பத்தினர் முன்னிலையில் எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications