பிரிட்டன் மன்னரான சார்லஸ்.. இனி தேசிய கீதம், பாஸ்போர்ட், நாணயங்களில் வரும் மாற்றங்கள்!
லண்டன்: பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரிட்டன் தேசிய கீதம் 1952க்கு பின் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார் அவருக்கு வயது 96 . பிரிட்டன் மகாராணி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்தவர்.

பிரிட்டனில் நடக்கப்போகும் மாற்றம்
ராணி எலிசபெத் மரணம் அடைந்த நிலையில் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் பிரிட்டன் பணம், நாணயங்கள், தேசிய கீதம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

சின்னங்களில் மாற்றம்
பிரிட்டன் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், இனி பிரிட்டனில் வெளியாகும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றில் மன்னரின் உருவம் பொறிக்கப்படும். நணயங்கள் போலவே, இனி பிரிட்டன் முத்திரை சின்னமான மன்னரின் தலை அடையாளமாக பொறிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், பிரிட்டன் காவல்துறையினரின் ஹெல்மட்டுகளில் உள்ள சின்னங்களில் மாற்றம் செய்யப்படும்.

தேசிய கீதம் மாற்றம்
இதுமட்டுமல்லாமல் பிரிட்டனின் தேசிய கீதம் இனி "காட் சேவ் தி கிங்" என மாற்றம் செய்யப்படுகிறது. 1952 முதல் ஆண் பதிப்புக்கான தேசிய கீதம் பாடப்படாததால் இது இளைய தலைமறையினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிரிட்டன் தேசிய கீதம் நியூசிலாந்து நாட்டின் தேசிய கீதமாகவும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் அரச கீதமாகவும் உள்ளது.

பாஸ்போர்ட் அடையாளம் மாற்றம்
அதேபோல் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டின் உள் அட்டையில் உள்ள வாசகங்கள் கிரீடத்தின் பெயரில் வழங்கப்படுவதால், அவை புதுப்பிக்கப்பட வேண்டும். இதே விதிமுறைகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாட்டு பாஸ்போர்ட்-களுக்கும் பொருந்தும். மேலும், அரசு கருவூலம், சுங்கத்துறை மற்றும் கலால் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட உள்ளது. மேலும், குயின்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியில் இருக்கும் காவலர்களின் பெயரும் மாற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications