Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபிசிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.. பிரிட்டன் எம்பி ஒரே போடு.. பிரதமர் மோடிக்கும் ஆதரவு

இந்தியாவும் பிரிட்டனும் நல்ல நண்பர்கள் என்று அந்நாட்டு எம்பி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: குஜராத் கலவரம் குறித்து சமீபத்தில் பிபிசி வெளியிட்டிருந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிபிசி இங்கிலாந்து அரசின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறியுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண்கள் பலர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி சமீபத்தில் இரண்டு பாகங்கள் கொண்ட India: The Modi Question எனும் ஆவணப்படத்தை வெளியிட்டது.

இது வெளிவந்த உடனேயே மத்திய அரசு தரப்பில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் பலர் இப்படத்தை பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரப் படம் என்று சாடினர். இதனையடுத்து படம் 2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி சமூக வலைத்தளத்தில் இப்படம் வெளியிட தடை செய்யப்பட்டது. இதனை ஏற்ற பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் படத்திற்கு தடை விதித்தன.

தடை

தடை

மத்திய அரசின் எதிர்ப்பும், இந்த தடையும் எதிர்க்கட்சிகளிடையே ஆத்திரத்தை கிளப்ப கேரளா தொடங்கி டெல்லி வரை இந்த படத்தை எதிர்க்கட்சிகள் திரையிட தொடங்கின. கேரள உயர்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் படத்தை திரையிட்டனர். இதனையடுத்து ஜேஎன்யுவிலும் படம் திரையிடப்பட்டது. ஆனால் இதற்கு வலதுசாரி மாணவர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த திரையிடலுக்கு பல்கலைக்கழக நிர்வாகமும் அனுமதி மறுத்த நிலையில் அதனையும் மீறி திரையிடப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.

தடையை மீறி திரையிடல்

தடையை மீறி திரையிடல்

இதேபோல ஜாமியா மிலியா பல்கலைகயில் ஆவணப்படத்தை திரையிட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தது. போராட்டங்களும், திரைப்படத்திற்கு எதிரான மத்திய அரசின் கருத்துக்களும் ஒருபுறம் இருக்க மறுபுறம், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் திடீரேன வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்த தொடங்கினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஜனநாயக விரோத போக்கு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

ரெய்டு

ரெய்டு

இந்த ரெய்டு காரணமாக பிபிசி அலுவலகத்தில் சுமார் 10 ஊழியர்கள் 60 மணி நேரமாக இருக்க வைக்கப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்ந்த ரெய்டு ஒரு வழியாக மூன்று நாட்களுக்கு பின்னர் வியாழக்கிழமை(பிப்.16) முடிவடைந்தது. இதில் பிபிசி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் ஆகியவை குளோனிங்க் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று இந்த ரெய்டு குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, ஆங்கிலம் தவிர பிற மொழி தளங்களில் பிபிசியின் செயல்பாடுகளும், அதன் மூலம் கிடைத்த வருவாயும் ஒத்து போகவில்லை. இதுதொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம்" என்று கூறியது.

கருத்து

கருத்து

இந்த ரெய்டு குறித்து பிரிட்டன் தரப்பில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று பிரிட்டன் எம்பி இது குறித்து கூறியுள்ளார். இங்கிலாந்தின் ஹாரோ ஈஸ்ட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாப் பிளாக்மேன், "பிபிசி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், "இந்த ஆவணப்படம் வெளியிலிருந்து தயாரிக்கப்பட்டது. பிபிசி இதனை மேற்பார்வை மட்டுமே பார்த்தது. எப்படி இருப்பினும் இப்படம் பிபிசி வெளியிட்டிருக்கக்கூடாது. ஏனெனில் இந்நிறுவனம் உலக அளவில் பல நற்பெயரை பெற்றிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கலவரத்தை இது உண்மையில் விரிவாக ஆராயவில்லை.

இந்தியாவுக்கு ஆதரவு

இந்தியாவுக்கு ஆதரவு

2002 கலவரத்தின்போது குஜராத்தில் அமைதியை ஏற்படுத்த அப்போதைய மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திருக்கிறார். எனவே தற்போது இந்த ஆவணப்படம் வெளிவந்திருப்பது வருந்தத்தக்கது. இது இந்தியா-பிரிட்டன் நல்லுறவை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதி. எப்படி இருந்தாலும் இந்த ஒரு படம் இரு நாட்டின் உறவை பாதித்துவிடாது. ஏனெனில் இந்தியாவும் பிரிட்டனும் நல்ல நண்பர்கள்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+