லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எண்ட்கேம்.. மொத்தமாக முடிவை நோக்கி கொரோனா பெருந்தொற்று.. ஹு சொன்ன நல்ல செய்தி.. எங்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பாவில் கொரோனா பரவல் மொத்தமாக முடிவை நோக்கி சென்று இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Omicron in Community Transmission Stage in India, says INSACOG | OneIndia Tamil

    உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக குறைய தொடங்கி உள்ளது. அமெரிக்கா,இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் தினசரி கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் எப்படி வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது.

    முக்கியமாக ஐரோப்பாவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் கொரோனா கேஸ்கள் சரிந்து வருகின்றன. அங்கு மூன்றாம் அலை முன்பே ஆரம்பித்துவிட்டதால் தற்போது கேஸ்கள் குறைந்து வருகிறது.

    குட்நியூஸ்.. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலியில் சட்டென சரிந்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது? குட்நியூஸ்.. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலியில் சட்டென சரிந்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?

    ஐரோப்பா

    ஐரோப்பா

    இந்த நிலையில் ஐரோப்பாவில் கொரோனா பரவல் மொத்தமாக முடிவை நோக்கி சென்று இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் ஐரோப்பாவில் புதிய நிலையை அடைந்துள்ளது. இதனால் அங்கு மொத்தமாக பெருந்தொற்று முடியும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் பெருந்தொடரின் கடைசி கட்டமான எண்ட்கேமில் இருக்கிறார்கள். அதாவது கடைசி சுற்றில் இருக்கிறார்கள்.

    கொரோனா அலை

    கொரோனா அலை

    ஐரோப்பாவில் ஓமிக்ரான் 60 சதவிகித மக்களை மொத்தமாக தாக்கும். மார்ச் மாதத்திற்குள் அங்கு 60 சதவிகித மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் அங்கு மக்களுக்கு மந்தை எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஏற்கனவே வேக்சின் காரணமாக மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது. இது உடனடியாக கொரோனா பரவலை தடுக்கும். இந்த வருட இறுதியில் மீண்டும் சிலருக்கு கொரோனா கேஸ்கள் வரலாம்.

    ஓமிக்ரான் கேஸ்கள்

    ஓமிக்ரான் கேஸ்கள்

    ஆனால் மீண்டும் மொத்தமாக பெருந்தொற்று வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கொரோனா பெருந்தொற்று முடிவிற்கு வரும் வாய்ப்பு இருந்தாலும் இது எண்டமிக் போல மாறுகிறதா என்று சொல்ல முடியாது. அதாவது ஃப்ளு காய்ச்சல் போல சீசன் காய்ச்சலாக கொரோனா மாறுமா என்று சொல்ல முடியாது. கொரோனா கணிக்க முடியாத ஒன்று. எதிர்காலத்தில் அது மாறும் வாய்ப்புகள் உள்ளன. நாம் கவனமாக இருக்க வேண்டும்.

     உலக சுகாதார மையம்

    உலக சுகாதார மையம்

    ஆனால் இப்போது ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் இப்போது அதிகம் பரவுகிறது. இதனால் புதிய வகை வேரியண்ட்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி உருவாகும் பட்சத்தில் அது மீண்டும் புதிய அலையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன., என்று ஐரோப்பாவிற்கான உலக சுகாதார மைய பிரிவு தெரிவித்துள்ளது.

    முன்பே ஆருடம்

    முன்பே ஆருடம்

    ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பரவல் முடிவிற்கு வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான தலைமை மருத்துவர் ஆண்டனி பவுச்சி முன்பே தெரிவித்து இருந்தார். ஓமிக்ரான் ஒரு வகையான மந்தை எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. மக்கள் இதனால் வேகமாக பாதிப்பு அடைகிறார்கள். இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதன்மூலம் கொரோனா பரவல் முடிவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது உலக சுகாதார மையமும் இதே விஷயத்தை குறிப்பிட்டுள்ளது.

    English summary
    Coronavirus pandemic is in the stage of Endgame in Europe says WHO report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X