முள் உரசினாலே 'தற்கொலை' தான்.. உலகின் மிக ஆபத்தான செடி.. கூண்டில் வைத்து வளர்க்கும் மனிதர்!
லண்டன்: உலகின் மிக ஆபத்தான செடி ஒன்றினை பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் தனது வீட்டில் வளர்த்து வருவது அனைவரையும் அச்சமடையச் செய்துள்ளது.
இந்த செடியிலும், அதன் இலைகளிலும் இருக்கும் சிறிய முட்கள் மிக ஆபத்தானவையாக அறியப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு பாம்பு கடித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு வலியை இந்த முட்கள் கொடுக்கும் என தாவர விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதற்கென பிரத்யேகமாக இரும்புக் கூண்டை செய்து அதற்குள் அந்தச் செடியை வைத்து அந்த நபர் வளர்த்து வருகிறார்.

ஆளையே காலி செய்யும் செடிகள்
மனிதர்களில் எவ்வாறு நல்லவர்கள், கெட்டவர்கள் என இருக்கிறார்களோ, செடிகளிலும் இந்த வேறுபாடு இருக்கிறது. மிக மோசமான, ஆபத்தை விளைவிக்கும் செடிகளும் இந்த உலகில் ஏராளமாக இருக்கின்றன. உதாரணமாக, பூச்சிகள், தவளைகள், ஏன் பறவைகளை பிடித்து தின்னும் செடிகளும் இருக்கின்றன. இவற்றில் நம் விரல் மாட்டினாலும் காலி தான். அதேபோல, சில செடிகளின் முட்கள், இலைகளில் உள்ள பசைகள் ஆகியவை மனிதர்களையே கொல்லும் விஷத்தன்மை கொண்டவை.

உலகிலேயே ஆபத்தான செடி
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த டேனியல் எமிலின் (44) என்பவர் உலகிலேயே மிக ஆபத்தான செடியாக அறியப்படும் 'ஜிம்பி ஜிம்பி' (Gympy Gympy) என்ற செடியைதான் அவர் வளர்த்து வருகிறார். பெயரை கேட்டால் காமெடியாக இருக்கிறது என நினைக்க வேண்டாம். மிக மோசமான பாதிப்புகளை தரக்கூடிய செடி இது. இந்த செடியின் மீதும், அதன் இலைகள் மீதும் மிக மிகச் சிறிய முட்கள் இருக்கும். இந்த இலைகளையோ அல்லது செடியையோ யாராவது தொட்டால் அவ்வளவுதான். இந்த முட்கள் அவர்களை பதம் பார்த்துவிடும்.

தற்கொலை எண்ணத்தை தூண்டும்..
முள் என்றால் சாதாரணமாக இருக்கும் முள் என நினைத்துவிட வேண்டாம். நல்ல பாம்பு கடித்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு வலியை இந்த முள் தரக்கூடியது. மேலும், பல மாதங்களுக்கு இந்த முள் குத்திய தடிப்புகளும், வலியும் அப்படியே இருக்கும். நாளுக்கு நாள் இந்த வலி அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறையாது. மேலும், இந்த முட்களில் உள்ள விஷமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியவை. இதனால் இந்த முள் நன்றாக குத்திவிட்டால் மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்துவிடும். பலர் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்த செடியின் முட்கள் குத்தினால் மரணம் வரை கூட சென்றுவிடும்.

'போர் அடித்ததால் வளர்த்தேன்..'
இந்த அளவுக்கு மோசமான 'ஜிம்பி ஜிம்பி' செடியைதான் டேனியல் எமிலின் வளர்த்து வருகிறார். யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூண்டில் வைத்து இந்த செடியை வளர்க்கிறார். மேலும், அந்தக் கூண்டுக்கு வெளியே 'டேஞ்சர்' குறியீடையும் அவர் வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, "செடிகளை வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சாதாரண செடிகளை வளர்த்து வளர்த்து 'போர்' அடித்துவிட்டது. அதனால், எந்த செடி மிக ஆபத்தான செடி என இணையத்தில் தேடி பார்த்த போது இந்தச் செடிதான் வந்தது. இது ஆஸ்திரேலியாவின் காட்டுப்பகுதிகளில் மட்டுமே இருக்கக்கூடியவை. ஆனால், சில ஆன்லைன்களில் இந்த செடியின் விதைகள் இருந்தன. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்தச் செடிகளின் விதைகளை வாங்கினேன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications