கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் பயண தடை விலக்கு.. ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா முறையீடு
லண்டன் : ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரக்கூடிய தடுப்பூசி பாஸ்போர்ட்டிற்கான விலக்கு பட்டியலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டையும் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
தற்போது ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, ஆக்ஸ்ட்ராசெனெகா-ஆக்ஸ்போர்டின் வாக்ஸெர்வ்ரியா மற்றும் ஜான்சன் & ஜான்சனின் ஜான்சென் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே பாஸ்போர்ட் விலக்கு பட்டியலில் இருப்பதற்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த நான்கு தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை போடப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கப்படும் மற்றும் தொற்றுநோய்களின் போது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1 முதல் ( நாளை) முதல் அமலுக்கு வருகிறது.

நாளை முதல் நடைமுறை
இந்நிலையில் நாளை முதல் நடைமுறைக்கு வரக்கூடிய தடுப்பூசி பாஸ்போர்ட்டிற்கான விலக்கு பட்டியலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டையும் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஏற்றுக்கொள்வது
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிகள் குறித்து மத்திய அரசு உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது,
"தேசிய அளவில் அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதில் தனிப்பட்ட முறையில் நாடுகளுக்கு நெகிழ்வுத்தன்மை உள்ளது,

நாங்களும் ஏற்போம்
இந்தியாவில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோவிட் சான்றிதழை அங்கீகரிப்பதற்காக இந்தியா ஒரு பரஸ்பர கொள்கையை நிறுவும் என்று நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்தோம். இதேபோல் ஐரோப்பிய ஒன்றியமும் டிஜிட்டல் கோவிட் சான்றிதழ்களில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று இந்திய சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறின,

கோரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழைக் கொண்டுள்ள அனைவருக்கும் கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதற்காக விலக்கு அளிப்பார்கள். இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை ஒட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லஸுடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் பாஸ்போர்ட் விலக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications