இந்திய தூதரை வழிமறித்த காலிஸ்தான் தீவிரவாதிகள்! குருத்துவாரா செல்ல விடாமல் ரகளை! பிரிட்டனில் பதற்றம்
லண்டன்: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் மோதல் தொடரும் நிலையில், திடீரென பிரிட்டனில் இந்தியத் தூதரை வழிமறித்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் ரகளையில் இறங்கியுள்ளனர்.
இந்தியா கனடா இருந்த நல்லுறவு கடந்த சில காலமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத சரமாரியாக அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்துகிறது. இருப்பினும், ஆதாரத்தை வெளியிடாமல் இந்தியாவை மட்டும் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறது.
வழிமறித்து ரகளை: இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மற்றொரு ஷாக் சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விக்ரம் துரைசாமியை ஸ்காட்லாந்து ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவிற்குள் நுழைய விடாமல் தடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
பெரும் பதற்றம்: பார்கிங் வரை வந்து இவர்கள் எல்லை மீறியுள்ளனர். காருக்குள் விக்ரம் துரைசாமி இருக்க அதன் அருகிலேயே இரு காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதில் ஒருவர் விக்ரம் துரைசாமியின் காரையும் திறக்க முயல்கிறார். இருப்பினும், நல்வாய்ப்பாக அவரது கார் உட்புறம் லாக் செய்யப்பட்டிருந்ததால், காரை திறக்க முடியவில்லை. இல்லையென்றால் மோசமான சம்பவம் நடந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த கார் குருத்வாரா வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவத்திற்கும் குருத்வாரா கமிட்டிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. சொல்லப்போனால் விக்ரம் துரைசாமியை அழைத்ததே குருத்வாரா கமிட்டி தான்.. ஆனால், அங்கிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் தான் இந்த மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மற்றொரு வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குருத்வாரா ஊழியர்களையும் மிரட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
புகார்: இந்த விவகாரம் குறித்து இதுவரை இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிக்கையும் இல்லை. இருப்பினும், இது இந்தியத் தூதரின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்குத் தடை இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் இதுபோல வெளிப்படையாகவே இயங்கி வருகின்றனர். பிரிட்டனிலும் கடந்த காலங்களில் இந்து கோயில்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியத் தூதர் ஒருவரையே காலிஸ்தான் பயங்கரவாதிகள் வழிமறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications