லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தொற்று-ஒரு வாரத்தில் குணமடையும் குழந்தைகள்- தொடரும் தலைவலி, சோர்வு- லண்டன் ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் பொதுவாக 1 வாரத்தில் குணமடைந்துவிடுகின்றனர்; அத்துடன் இந்த குழந்தைகளுக்கு தலைவலியும் உடல்சோர்வும் தொடர்ந்து இருக்கிறது என லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு தொடர்பாக The Lancet Child and Adolescent Health journal -தி லேன்செட் மருத்துவ துறை பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு தரவுகள்:

லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர்கள், குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். லண்டனில் 5 வயது முதல் 17 வயது வரையிலான 2,50,000 குழந்தைகளின்/ சிறுவர்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

Lancet Explains How Children Affected by Coronavirus

கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 22 வரையில் இவர்களில் 1734 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டன. பின்னர் ஆர்டி-பிசிஆர் முடிவுகளில் கொரோனா தொற்று பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு 6 நாட்களுக்கு நீடித்து இருந்ததும் தெரியவந்தது. கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் 3 வகையான அறிகுறிகள் இருந்தன.

கொரோனா பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அதிகபட்சம் 4 வாரங்களுக்குள் குணமடைந்துள்ளனர். 4 வாரங்களுக்குப் பின்னர் பொதுவாக குழந்தைகளுக்கு உடல் சோர்வு, தலைவலி ஆகிய பாதிப்புகள் இருப்பதும் தெரியவந்தது.

அதாவது ஆய்வுக்குட்பட்ட குழந்தைகளில் 7764 பேருக்கு உடல் சோர்வு இருப்பது உறுதியானது. தலைவலி, நுகர்தல் இழப்பு ஆகியவை பொதுவான பாதிப்புகளாக இருக்கின்றன.

1379 குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் 2 மாதங்கள் நீடித்திருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. 2% -க்கும் குறைவான குழந்தைகளுக்கு 8 வாரங்கள் வரை பாதிப்புகள் இருந்தன.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 20 கோடியை கடந்தது- அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 20 கோடியை கடந்தது- அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்த குழந்தைகளுக்கு சளி பாதிப்பு, தொண்டை வலி மற்றும் சளியுடனான காய்ச்சல் இருப்பதும் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு கொரோனா ஆபத்து குறைவாகவே உள்ளது.

அதேநேரத்தில் 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1734 குழந்தைகளில் 15 பேருக்குதான் 28 நாட்களுக்கு பாதிப்புகள் நீடித்திருந்தன. இது தொடர்பாக லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் எம்மா டன்கென் கூறுகையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், சிறுவர்களுக்கு இதர பாதிப்புகள் நீண்டகாலத்துக்கு இருக்கின்றன என்கிறார். இவ்வாறு தி லேன்செட் வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் என்ற பாதிப்பு அதிகரித்திருப்பதாக சில் மாதங்களுக்கு முன்னர் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கொரோனா பாதித்த முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் கொரோனா பாதிப்பானது இந்தியாவில் குழந்தைகளை ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் முன்னர் தி லேன்செட் பத்திரிகையில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது. தாய் தந்தையர் அல்லது பாதுகாத்து வந்த தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை இழக்கும் குழந்தைகள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது; இதனால் குழந்தைகள் பொருளாதார பாதிப்பையும் மன ரீதியான பாதிப்பையும் எதிர்கொள்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. பதறும் China| Explained

    ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்திருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவில் ஏப்ரல், மே மாதத்தில் 645 குழந்தைகள், கொரோனாவால் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 158 குழந்தைகள், ஆந்திராவில் 119, மகாராஷ்டிராவில் 83, மத்தியப் பிரதேசத்தில் 73 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெற்றோரை இழந்த இந்த குழந்தைகள் கல்வியைத் தொடருவதற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

    English summary
    The Lancet Child and Adolescent Health journal's article noted that It usually takes children no longer than six days to recover from Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X