பார்க்கவே பயங்கரமா இருக்கே.. பீச்சில் கரையொதுங்கிய விசித்திர "ஏலியன்" உயிரினம்! மிரண்ட பொதுமக்கள்!
லண்டன்: பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதி கடற்கரையில் ஜாலியாக வாக்கிங் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி ஒரு நொடி தூக்கி வாரிப்போட்டுள்ளது. பார்க்கவே வினோதமாக ஏதோ ஏலியன் போல கடற்கரையில் இருந்த விஷயத்தைப் பார்த்து அவர்கள் மிரண்டு போய்விட்டனர். இது தொடர்பான போட்டோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
இந்த பிரபஞ்சத்தில் நிச்சயம் மனிதர்களைப் போல வேறு கிரகங்களிலும் கூட உயிரினங்கள் இருக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. இதுபோன்ற ஏலியன்களின் இருப்பு குறித்து உலகெங்கும் ஆய்வுகளும் நடந்து வருகிறது. ஏலியன்கள் ஏற்கனவே பூமிக்கும் கூட வந்திருக்கலாம் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஏலியன்
அதற்கேற்ப இணையத்தில் ஏலியன்கள் எனச் சொல்லி சில படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அவை இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. அப்படி தான் இப்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதி பகிர்ந்துள்ள படம் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இங்கிலாந்து கடற்கரையில் மர்மமான எலும்புக்கூடு போன்ற உருவத்தைக் கண்டதால் அவர்கள் குழப்பமடைந்தனர்.
அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலா- டேவ் ரீகன் தம்பதி கடந்த மார்ச் 10ம் தேதி கென்ட்டின் மார்கேட்டில் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது தான் கடற்கரையில் அவர்கள் எலும்புக்கூடு போன்ற உருவத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். மணலில் பகுதி புதைந்து இருப்பது போல உள்ள அந்த உருவம் பார்க்கவே பீதி அடையச் செய்வது போல இருக்கிறது.
விசித்திரமான உருவம்
இது தொடர்பாக பவுலா கூறுகையில், "எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு விஷயத்தை நான் பார்த்ததே இல்லை. இது என்னவென்றே தெரியவில்லை.. பார்க்கவே விசித்திரமாக இருக்கிறது. முன்பகுதி பார்க்க ஏலியன் போலவும் பின்பகுதி பார்க்க இறந்த சீல் போல இருக்கிறது. ஏதோ பல காலம் இங்கு இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், துளி கூட சிதைந்து போகவில்லை. இதுவே குழப்பத்தை அதிகரிக்கிறது" என்றார்.
இந்த விசித்திரமான உருவத்தைப் பார்த்தவுடன் அங்குக் கூட்டமும் கூடிவிட்டதாம். சிலர் படகில் இருந்து விழுந்த பொருளாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் படகின் முன்பகுதியில் உள்ள செதுக்கப்பட்ட உருவத்தைப் போல இருக்கிறது என்கிறார்கள். இருப்பினும், இதுவரை யாருக்கும் இது என்ன உருவம் என்பது தெளிவாகத் தெரியவில்லையாம்.
முதல்முறை இல்லை
அதேநேரம் கடற்கரைகளில் விசித்திரமான பொருள் பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் ரஷ்யாவைச் சேர்ந்த மீனவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தைப் பிடித்தார். அதிக ஆழத்தில் வசிக்கும் அந்த உயிரினம் பார்க்கவே வினோதமாக இருந்தது.
அதேபோல அமெரிக்க மீனவர் இதுவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம், நியூயார்க்கில் உள்ள ஹட்சன் பள்ளத்தாக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எரிக் ஒசின்கி என்ற மீன் இனத்தைப் பிடித்தார். பார்க்கவே பயங்கரமாக இருந்த அந்த மீனின் படமும் இணையத்தில் டிரெண்டாகின.
என்ன காரணம்
பொதுவாகக் கடலிலும் கடற்கரைகளிலும் தான் இதுபோன்ற வினோதமான பொருட்கள் அதிகம் காணப்படும். ஏனென்றால் கடல் என்பது இன்னுமே மர்மமான ஒன்றாகவே இருக்கிறது. கடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்கு இன்னும் தெரியாது. இதன் காரணமாகவே கடல் மற்றும் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் இதுபோன்ற வினோத உருவங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications