வேலை நேரத்தில் உடலுறவு..! த்ரிலுக்காக செய்யும் பெண்கள்.. ஆண்கள் இதில் ரொம்பவே மோசம்! புதிய ஆய்வு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கொரோனா முடிந்தாலும் கூட இன்னும் பல இடங்களில் ஒர்க் ஃப்ரம் ஹோம் முடியவில்லை. இதற்கிடையே ஒர்க் ஃப்ரம் ஹோம் பற்றிய சுவாரசிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது எல்லாமே செயலிகளில் தான் நடந்து வருகிறது. அனைத்துமே விரல் நுனியில் இருப்பதால், இந்த நவீனக் காலத்தில் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய் வருகிறது.

இதன் காரணமாக மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது.

ஒர்க் ஃப்ரம் ஹோம்

ஒர்க் ஃப்ரம் ஹோம்

இது ஒரு பக்கம் இருக்க கொரோனா காலத்தில் அனைவருமே வீடுகளில் முடங்கும் சூழல் உருவானது. அலுவலகம் செல்லாமல் வேலை செய்வது எப்படி என்று இருந்த நிலை மாறி, இப்போது வேலை செய்ய ஆபீஸ் போக வேண்டுமா என்றே பலரும் நினைக்கிறார்கள். அந்தளவுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோமில் பலரும் செட்டிலாகிவிட்டனர். இருப்பினும், இந்தஒர்க் ஃப்ரம் ஹோம் நாம் செய்யும் குறைந்தபட்ச உடல் உழைப்பையும் இல்லாமல் செய்துவிட்டது. இதன் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் போது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

புதிய ஆய்வு

புதிய ஆய்வு

இதுபோன்ற ஆய்வுகள் பகீர் கிளப்புவதாக இருக்கும் போதிலும், பிரிட்டனில் ஒர்க் ஃப்ரம் ஹோம் குறித்து சுவாரசிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த செக்ஸ்வல் வெல்னஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சுமார் 49% பிரிட்டிஷ் மக்கள் வேலை நேரத்தில் சுய இன்பம் செய்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த பிரிட்டன் மக்கள் ஒர்க் ஃப்ரம் ஹோமை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி சுய இன்பம் செய்வதன் மூலம் தங்களுக்கு மன அழுத்தம் குறைவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

சுமார் 38 சதவீத மக்கள் தங்கள் வேலை நேரத்தில் உடலுறவு கொள்வதாகக் கூறினர். வீட்டிலேயே அதிகப்படியான நேரம் இருப்பதால் தங்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்பது போல இருப்பதாகவும் இதன் காரணமாகவே உடலுறவு கொள்வதாக 64% பேர் குறிப்பிட்டுள்ளனர். அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய உள்ளதால் அழுத்தம் ஏற்படுவதாகவும் உடலில் மோசமான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், வேலை நேரத்தில் உடலுறவு கொள்ள இவற்றையும் காரணமாகக் கூறியுள்ளனர்.

பெண்கள்

பெண்கள்

இந்த ஆய்வில் பெண்கள் பலரும் கூட தாங்கள் வேலை செய்யும் நேரத்தில் உடலுறவு மற்றும் சுய இன்பம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். வேலைக்கு நடுவே இதைச் செய்வதால் ஏற்படும் திரில் காரணமாகவே இப்படிச் செய்வதாக 39 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் 32 சதவீத ஆண்கள் மட்டுமே த்ரில்லை (thrill) ஒரு காரணமாகக் கூறியுள்ளனர். ஒர்க் ஃப்ரம் ஹோமை பிரிட்டன் மக்கள் எந்தளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

ஆண்கள்

ஆண்கள்

அது மட்டுமின்றி, பிரிட்டன் மக்களில் எத்தனை பேர் வேலை நேரத்தில் உடலுறவு கொண்டார்கள் என்றும் கேட்கப்பட்டது. இதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே வேலை நேரத்தில் உடலுறவு கொண்டுள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதாவது மூன்றில் ஒரு பங்கிற்கு (34 சதவீதம்) பெண்கள் வேலை நேரத்தில் உடலுறவு கொண்டுள்ளனர். அதேநேரம் ஆண்களைப் பொறுத்தவரை சுமார் 43 சதவீதம் பேர் உடலுறவு கொண்டுள்ளனர்.

உடல்நிலை

உடல்நிலை

கொரோனா காலத்தில் தான் அனைவரும் வேறு வழியின்றி ஒர்க் ஃப்ரம் ஹோம் முறைக்குத் தள்ளப்பட்டோம். இப்போது கொரோனா முடிந்துவிட்ட போதிலும், பெரும்பாலான அலுவலகங்களில் ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் தொடர்கிறது. இதில் ஊழியர்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால், அவர்களுக்கு உடல் பருமன், மன அழுத்தம் என பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் போதிய உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+