ஓமிக்ரான் பாதித்த அத்தனை பேருக்கும் "ஒரு அறிகுறி" ஒரே மாதிரி இருக்குதே.. உஷார் மக்களே!
ஒமிக்ரான் வைரஸின் புது அறிகுறிகள் வெளியாகி உள்ளது
லண்டன்: மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்புடையவையாக எது இருந்தாலும், அதை அசால்ட்டாக எடுத்து கொள்ள கூடாது என்றும் அவை ஒருவேளை ஒமிக்ரான் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் புது தகவலை வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனாவில் இருந்து ஒருவழியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒமிக்ரானின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகின்றன.
இப்போதைக்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டவுள் மடங்காக பெருகி கொண்டு வருகிறது.

ஒமிக்ரான் பாதிப்பு
நம் நாட்டை பொறுத்தவரை மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன், 7-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பை தந்து வருகிறது.. 200 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.... அதேசமயம், இந்த ஒமிக்ரான் பன்மடங்கு வீரியம் கொண்டது, வேகமாக பரவக்கூடியது என்ற ஆய்வுகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.. குறிப்பாக டெல்டா வைரஸைவிட பரவும் தன்மையில் வேகம் கொண்டது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஜலதோஷம்
அதேசமயம், ஒமிக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன என்பது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.. அதன்படி அவ்வப்போது அதன் அறிகுறிகளும் சொல்லப்பட்டு வருகின்றன.. சில தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் நடந்த ஆய்வில், புதிய அறிகுறிகளாக, மூக்கு ஒழுகுதல் (Runny Nose), தலைவலி (Headache), சோர்வு (Fatigue) மற்றும் தொண்டை வறட்சி (Dry throat) போன்ற அறிகுறிகள் கூறப்பட்டிருந்தன.. இந்த அறிகுறிகள் அனைத்துமே சாதாரண ஜலதோஷத்திற்கானது, சாதாரண சளி என்று எடுத்து கொண்டு அசால்ட்டாக விட்டுவிட்டால் என்னாவது? என்ற கலக்கம் மக்களை சூழ்ந்தது.

தொண்டை வலி
இப்படி பல ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் பொதுவான அறிகுறியாக இருப்பது தொண்டை வலிதான்.. ஒமைக்ரானின்ஒரே ஒரு பொதுவான அறிகுறியாக தொண்டை வலி என்கிறார்கள்.. காரணம், ஆரம்ப காலத்தில் இந்த வைரஸால் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை வலிதான் முதலில் இருந்ததாம்.. அவர்கள் எல்லாருக்குமே தொண்டை வலி ஆரம்ப கட்டத்தில் முக்கிய அறிகுறியாக இருந்திருக்கிறது.. இதற்கு பிறகு மூக்கடைப்பு அடுத்த அறிகுறியாக இருந்துள்ளது

அறிகுறிகள்
இது தொடர்பாக, கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்தோரிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.. அதில், தலைவலி, சோர்வு, குளிர் போன்றவைகள் முக்கியமான மற்றும் பொதுவான அறிகுறிகளாக இருந்ததாம். ஆனால், ஜோ சிம்ப்டம் ட்ராக்கிங் (ZOE Symptom Tracking) என்ற மற்றொரு ஆய்வில், மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான மற்றும் அதிகமானது) தும்மல், தொண்டை புண் அல்லது வலி போன்றவைகள் ஒமிக்ரானின் அறிகுறிகள் என்று சொல்லப்பட்டுள்ளது.

தொண்டை வலி
அனைத்துவிதமான ஆய்விலும் தொண்டை வலி என்ற அறிகுறி இடம்பெற்றாலும், டெல்டாவுக்கும், ஒமிக்ரானுக்குமான அறிகுறிகள் வேறு வேறாக இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. அதாவது டெல்டா வைரஸ் பாதித்தால், சுவை தெரியாதாம், வாசனையும் தெரியாதாம்.. காய்ச்சல், இருமல், சோர்வு, சிலருக்கு குடல் பிரச்சனை போன்றவை அறிகுறிகளாக இருக்கின்றன..

அலட்சியம் கூடாது
ஆனால், ஒமிக்ரான் பாதித்தால், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்புடையவையாக இருக்கும் என்றும் இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது, ஒருவேனைள அது கோவிட்டாகவும் இருக்கலாம் என்றும் இந்த ஆய்வை நடத்தும் டிம் ஸ்பெண்டர் என்ற விஞ்ஞானி கடுமையாகவே எச்சரித்துள்ளார்... இன்னும் இந்த ஒமிக்ரான் நம்மை என்னவெல்லாம் செய்ய போகிறதோ?!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications