பிரிட்டன் அரச குடும்பத்தில் இப்படியொரு பிரச்சனையா! பரிதவிக்கும் இளவரசர் ஹாரி! கண்டுகொள்ளாத வில்லியம்
லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது சகோதரர் ஹாரி இடையே மோதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக சில புதிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் உள்ள அரச குடும்பத்திற்கு எனத் தனியாக பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர்கள் குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயம் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியாகும். அவர்களின் ஒவ்வொரு அசைவும் கூட இணையத்தில் கவனிக்கப்படும் ஒன்றாகவே இருக்கும்.

இதனால் இணையத்தில் எப்போதும் டிரெண்டிங்கில் தான் இந்த குடும்பத்தினர் இருப்பார்கள். ஆனால், கடந்த சில காலமாகவே இவர்களுக்கு ஏதோ கெட்ட காலம் போல.. தொடர்ந்து அரச குடும்பத்தில் சில மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது.
அரச குடும்பம்: கடந்த 2022 செப் மாதம் பிரிட்டன் மகாராணியாக இருந்த ராணி எலிசபெத் மரணமடைந்தது முதலே பிரச்சனை தான். கடந்தாண்டு மே மாதம் ராணி எலிசபெத் மகன் மன்னராக முடிசூட்டிக் கொண்ட நிலையில், கடந்த பிப். மாதம் அவருக்கு கேன்சர் பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் அரச பணிகளில் இருந்து சில காலம் விலகி சிகிச்சை எடுக்கும் சூழல் ஏற்பட்டது. இது அரச குடும்பத்தைப் பாலோ செய்வோருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்கு உள்ளேயே கடந்த மார்ச் மாதம் இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத்தரின் கேட்டிற்கும் கேன்சர் பாதிப்பு உறுதியானது. இந்தத் தகவலை அவர் வீடியோவாக வெளியிட்டு உறுதி செய்தார். இது பலருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருத்து. பொதுமக்கள் மட்டுமின்றி வில்லியம்ஸின் சொந்த சகோதரரான ஹாரிக்கும் இது பெரிய ஷாக் தான். ஏனென்றால் ஒரு காலத்தில் ஹாரி மற்றும் கேட் இடையே ஒரு நல்ல நட்புறவு இருந்தது.
வில்லியம்- ஹாரி: அப்படி இருக்கும் போது கேட்டிற்கு கேன்சர் இருப்பதாக வந்த இந்த தகவல் ஹாரியை கடுமையாகப் பாதித்தது. ஹாரி அரச குடும்பத்தில் இருந்து விலகி வந்து தனது மனைவி மேகன் மார்க்லே உடன் தனியாக அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், இந்த செய்தியைக் கேட்டு அவர் உடைந்து போனாராம். இதனால் அவர் கேட்டை பார்க்க வேண்டும் என நினைக்கிறார். இருப்பினும், துரதிருஷ்டவசமாக இளவரசர் வில்லியம் தனது சகோதரனை மனைவிக்கு அருகில் கூட அனுமதிக்கத் தயாராக இல்லை.
மோதல்: சகோதரர்களுக்கு இடையே பல காலமாக மோதல் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதிலும் குறிப்பாக ஹாரி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பிறகு இருவருக்கும் இடையேயான உறவு மொத்தமாக கட் ஆனது. தனது தந்தை சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கு ஹாரி வந்திருந்த போதிலும், அப்போதும் சகோதரர் உடனான உரசல் அங்கும் தொடர்ந்தது.
இதன் காரணமாகவே ஹாரி தனது மனைவியைச் சந்திக்க வில்லியம் மறுத்து வருகிறார். இளவரசி கேட் மட்டுமன்றி அரச குடும்பத்தின் மற்றவர்களையும் கூட ஹாரி சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
ஹாரி: சார்லஸ் மற்றும் அவரது முதல் மனைவியான டயானா ஆகியோருக்கு பிறந்தவர்கள் தான் வில்லியம் மற்றும் ஹாரி. இருவருக்கும் இடையே ஆரம்பம் முதலே ஆகாது. ஹாரி ஹாலிவுட் பிரபலம் மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் அரச குடும்பத்தில் இருந்து கடந்த 2022இல் விலகியது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications