வந்தாச்சு மாத்திரை.. கொரோனாவுக்கு நோ ஊசி.. நோ மருந்து.. முதல்நாடாக அனுமதி தந்தது பிரிட்டன்..!
கொரோனாவுக்கு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்
லண்டன்: கொரோனாவுக்கு மாத்திரை வந்தாச்சு.. அதை பற்றிதான் உலக நாடுகள் பரபரப்பாக பேசி வருகின்றன.
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.. இந்த வைரஸை எதிர்கொள்ள எந்தவித மருந்தும், சிகிச்சையும் கண்டுபிடிக்கவில்லை.
அதற்கான முயற்சியில் கடந்த 2 வருடங்களாகவே லட்சக்கணக்கான டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறுதல்
இப்போதைக்கு தடுப்பூசிகள் மட்டும்தான் நமக்கு ஒரே ஆறுதலாகவும், தடுப்பாகவும் இருந்து வருகிறது.. அந்த தடுப்பூசிகளிலும் பல்வேறு வகைகளை கண்டுபிடித்து, அதுகுறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல் முறையாக இந்த கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இது சிறந்த ஊக்கத்தை அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மருந்து
மெர்க்ஸ் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெராபியூட்டிக்ஸ் இணைந்து இந்த மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர்.. இதற்கு 'மால்னுபிரவிர்' என்று பெயர்.. உலக அளவில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு இந்த மாத்திரை, கேம் சேஞ்சராக இருக்கும் என்று பிரிட்டன் கூறியுள்ளது.. மேலும் அந்த மாத்திரையை தங்கள் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதியும் தந்துள்ளது.
Recommended Video

தடுப்பூசிகள்
எத்தனையோ பேருக்கு தடுப்பூசிகள் மீது இதுவரை நம்பிக்கை வரவில்லை.. அதனால் பலர் இன்றைய நாள் வரை தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள்.. இப்படிப்பட்டவர்களுக்கு ஒருவேளை மாத்திரை நம்பகத்தன்மையை ஏற்படுத்துமா? மாத்திரைகள் எளிதாக விழுங்கக்கூடியவை என்பதால், அதற்கு வருங்காலத்தில் வரவேற்பு அதிகரிக்குமா? என்றெல்லாம் தெரியவில்லை.

நம்பிக்கை
ஆனால், இந்த மாத்திரையை உட்கொண்டால், உடலில் வைரஸ் பரவல் கடுமையாவது தடுக்கப்படும் என்று கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் இந்த மாத்திரையை தொடர்ந்து 5 நாட்களுக்கு தினம் 2 வேளையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்..

நம்பிக்கை
இதை உட்கொள்வதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபடாமலேயே இது ஒருவரை காக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அந்நிறுவனத்தை சார்ந்தவர்கள். ஒருவேளை பிரிட்டன் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகளும் இதேபோன்ற மாத்திரையை நோக்கி பயணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications