லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

140 டிகிரி சுடு தண்ணியில ஸ்கூல் யூனிபார்மை டெய்லி துவைங்க.. பெற்றோர்களுக்கு நூதன உத்தரவு

கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது என்னென்ன கஷ்டங்களை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் யூனிபார்ம்களை தினமும் 1

Google Oneindia Tamil News

லண்டன்: உலகம் முழுவதும் பற்றி பரவியுள்ள கொரோனா வைரஸ் எப்போது தனது கோரப்பிடியை விடும் என்று யாருக்கும் தெரியாது. கொரோனா வைரஸ்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க பல நாடுகள் லாக் டவுனை அமல்படுத்தியுள்ளன. பள்ளிகள் திறப்பதைப்பற்றி எந்த நாடுகளுமே யோசிக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள்
திறக்கப்பட்டால் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. என்எச்எஸ் வழிகாட்டுதல் முறைப்படி மாணவர்களுக்கான டிரஸ் கோடு எப்படி இருக்க வேண்டும்
என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களுக்கு கூறியுள்ளனர்.

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது சுத்தமாக நன்கு துவைக்கப்பட்ட தளர்வான ஆடைகளை அணிவித்து அனுப்புங்கள். டி சர்ட், டிராக் சூட், போன்றவைகளை மட்டுமே போட்டு அனுப்புங்கள் ஏனெனில் தினசரியும் அவை எளிதாக துவைக்க முடியும். அதாவது 60 டிகிரி செல்சியஸ் அல்லது 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் துவைத்து உலர்த்தப்பட்ட ஆடைகளை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்கள்.

மகிழ்ச்சி தகவல்.. இந்தியாவில் கொரோனா இரட்டிப்பாகும் வேகம் குறைகிறது! குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்வுமகிழ்ச்சி தகவல்.. இந்தியாவில் கொரோனா இரட்டிப்பாகும் வேகம் குறைகிறது! குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்வு

சாதா டிரஸ் போதும்

சாதா டிரஸ் போதும்

பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே கொடுத்து விடுங்க. தேவையில்லாத பொருட்களை கொடுத்து விட வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றனர். டை கூட போடாதீங்க, கோட் போட வேண்டாம் ப்ளேசர் போடாதீங்க என்றும் கூறியுள்ளனர்.

கொதிக்கும் நீரில் அலசுங்கள்

கொதிக்கும் நீரில் அலசுங்கள்

வைரஸ்கள் ஸ்கூல் யூனிபார்ம்களில் 72 மணிநேரம் வரை உயிருடன் வாழும் தன்மை கொண்டவை எனவேதான் தினசரியும் 140 டிகிரி பாரன்ஹீட் கொதிக்கும் சூடான தண்ணீரில் யூனிபார்ம்களை அலசுங்கள். தினசரியும் சுத்தமான துணிகளைப் போட்டு பள்ளிக்கு அனுப்ப சொல்கிறார்கள்.

வாசிங் மெசின் வேண்டாம்

வாசிங் மெசின் வேண்டாம்

இறுக்கமான துணிகளை தவிர்த்து விடுங்கள். துணிகளை துவைத்த பின்னர் பெற்றோர்கள் தங்களின் கைகளை நன்றாக சுத்தமாக கழுவி விடுங்கள் என்றும் கூறியுள்ளனர். வாசிங் மெசின் உபயோகப்படுத்த வேண்டாம் ஏனெனில் வைரஸ்கள் வாசிங்மெசினிலும் உயிர்வாழக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலம் முடியட்டும்

கொரோனா காலம் முடியட்டும்

எல்லா பெற்றோர்களாலும் இதை ஃபாலோ பண்ண முடியாது என்றாலும் வேறு வழியில்லை. பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றித்தான் ஆகவேண்டும். இந்த கொரோனா காலம் முடியும் வரை யூனிபார்ம் இல்லாமல் சாதாரண உடைகளை அணிவித்து பள்ளிக்கு அனுப்பலாம்.

ஸ்கூல் திறப்பாங்களா?

ஸ்கூல் திறப்பாங்களா?

எது எப்படியோ இந்த பள்ளிகள் திறப்பது பற்றி செப்டம்பர் வரை யாராலும் முடிவெடுக்க முடியாது. மழலையர் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? அது எப்போது திறப்பது என்ற யோசனையில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அரசு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காவின் வில்லியம்ஸ்.

எப்போ ஸ்கூல் திறப்பாங்க

எப்போ ஸ்கூல் திறப்பாங்க

இந்த வழிகாட்டுதல்கள் எல்லாமே இங்கிலாந்தில்தான். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இந்தியாவில் ஒன்று முதல் ப்ளஸ் 1 தேர்வுகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கு பள்ளிகள் திறப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் என்னென்ன சொல்லப்போறாங்களோ.

English summary
Parents of children returning to schools in the UK following the coronavirus lockdown should wash their uniforms daily to stay in keepingwith NHS guidelines
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X