டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இரவு விவாதம்!
லண்டன்: இந்தியாவில் ஊடக சுதந்திரம், போராட்டக்காரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு விவாதிக்கப்படுகிறது.
3 வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு எதிரானது என கூறி லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லி எல்லையில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு- விவசாய சங்கங்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்த போராட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், பாப் பாடகி ரெஹான்னா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டோவும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இது உள்நாட்டு விவகாரம் என்பதால் இதில் வெளிநாட்டினர் கருத்து சொல்வதோ தலையிடுவதோ வேண்டாம் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விமர்சனங்களை பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பி கிளெடியா வெப்பே முன் வைத்து வருகிறார்.
இந்திய விவசாயிகள் போராட்ட விவகாரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என ஆன்லைனில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அது போல் சில பிரிட்டன் எம்பிக்களும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதன்படி லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி எம்பியும் மனுக்கள் குழு உறுப்பினருமான மார்டின் டே தொடக்க உரையாற்றுகிறார். பிரிட்டன் அரசு சார்பில் அந்நாட்டு அமைச்சர் ஒருவரும் பதில் அளிக்கவுள்ளார்.
மேலும் போராட்டக்காரர்களின் பாதுகாப்பு அம்சங்கள், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற தலைப்பிலான மனு மீது இந்த விவாதம் நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications