"ஊடக சுதந்திரம் முக்கியம்".. "பிபிசிக்கு எப்போதும் துணை நிற்போம்".. பிரிட்டன் அரசு உறுதி
"இந்திய பிரதமர் குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் ஆவணப்படம் எடுத்ததால், பிபிசி அலுலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது பகிரங்கமான மிரட்டல் நடவடிக்கை"
லண்டன்: பிபிசி உட்பட அனைத்து ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் அவசியம் என்றும், பிபிசிக்கு எப்போதும் துணையாக இருப்போம் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை கொண்டிருப்பதாக கூறிய பிரிட்டன், இந்த ரெய்டு விவகாரத்தை இந்தியாவிடம் எழுப்பியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

புயலை கிளப்பிய ஆவணப்படம்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து இரு ஆவணப்படங்களை பிபிசி ஊடகம் அண்மையில் வெளியிட்டது. குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும், அந்தக் கலவரத்துக்கும் தொடர்பு இருக்கும் வகையில் அந்த ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்கள் அனைத்தில் இருந்தும் மத்திய அரசு தடை செய்தது. மேலும், இந்த ஆவணப்படத்தை திரையிடுதவற்கும் தடைவிதிக்கப்பட்டது.

அதிரடி சர்வே
எனினும், மத்திய அரசின் தடையை மீறி நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களிலும், பொதுவெளிகளிலும் இந்த ஆவணப்படங்களை மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் திரையிட்டனர். இதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சர்வேயில் ஈடுபட்டனர். இது, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

அனல் பறந்த பிரிட்டன் நாடாளுமன்றம்
இந்த சூழலில், இந்தியாவில் பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற சர்வே குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து வடக்கு அயர்லாந்தின் டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜிம் ஷன்னான் கூறுகையில், "இந்திய பிரதமர் குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் ஆவணப்படம் எடுத்ததால், பிபிசி அலுலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது பகிரங்கமான மிரட்டல் நடவடிக்கை" என்றார். இதேபோல, பல எம்.பி.க்களும் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

சீக்கிய எம்.பி. கண்டனம்
இதனிடையே, பிரிட்டனின் முதல் சீக்கிய எம்.பி.யான தன்மன்ஜித் சிங் தேசி பேசுகையில், "ஊடக சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரிட்டன் நாட்டில் வாழ்வதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்திய பிரதமரை விமர்சித்து ஆவணப்படம் வெளியிட்ட காரணத்தால் பிபிசியில் ரெய்டு நடத்தப்பட்டது கவலையளிக்கிறது" என்றார்.

பிரிட்டன் அரசு உறுதி
இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசு சார்பில் எம்.பி. டேவிட் ரூட்லி பேசினார். அவர் கூறுகையில், "பிபிசிக்கு பிரிட்டன் அரசு எப்போதும் துணைநிற்கும். தொடர்ந்து நிதியுதவி வழங்கும். உலக அளவில் பிபிசி இயங்குவது மிகவும் முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. பிரிட்டனில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை பிபிசி விமர்சித்திருக்கிறது. ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம். இந்தியாவுடன் பிரிட்டன் நெருங்கிய நட்புறவை கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தை இந்தியாவிடம் பிரிட்டன் அரசு எழுப்பியுள்ளது" என அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications