Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? போட்டி எண்ணிக்கை 8 ஆக குறைந்தது -ரிஷி சுனக்கிற்கு லக் அடிக்குமா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில் நேற்று 8 ஆக குறைந்துள்ளது. எனினும் இதில் ரிஷி சுனக்கிற்கு பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு காலக்கட்டத்தின் போது அதை மீறி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டது, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முக்கிய பதவியில் நியமித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதனால் அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களை அவரை பதவி விலக வலியுறுத்தினர். அதோடு மட்டுமின்றி அவரை பதவி விலக வலியுறுத்தி, அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனா்.

 ராஜினாமா செய்தார்

ராஜினாமா செய்தார்

இதனால் வேறு வழியின்றி பிரதமா் போரிஸ் ஜான்சன், பிரதமா் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அடுத்த பிரதமா் தோ்ந்தெடுக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை வகிக்கவிருப்பதாகவும் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டும் அல்லாது உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ‘1922 குழு’

‘1922 குழு’

இந்த நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் சக்தி வாய்ந்த '1922 குழு' தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் தேர்வு முறைக்கான கால அட்டவணை மற்றும் விதிகளை நேற்று முன் தினம் வகுத்தது.

அதன்படி, பிரதமர் பதவிக்கான போட்டியில் நேற்று 11 பேர் இருந்த நிலையில், இன்று தடாலடியாக அந்த எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. எனினும் மீதமுள்ள இந்த 8 பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னனியில் உள்ளதாக பேசப்படுகிறது.

 இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் போட்டி

இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் போட்டி

இவரோடு தற்போது போட்டிக் களத்தில் இருக்கும் 8 பேரில் நான்கு பேர் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்கள். சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறையின் முன்னாள் அமைச்சர் ஜெரெமி ஹண்ட், வர்த்தகத்துறை இணை அமைச்சர் பென்னி மோர்டவுண்ட், வெளியுறவு விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர் டாம் டுகென்தட் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய 4 பேரும் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்களாக உள்ளனர்.

மீதமுள்ள 4 பேரில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவரான ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புகள் பிரகசமாக உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. மற்றொருவர் அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிரேவர்மேன். இதேபோல் நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த கெமி படேனோச், ஈராக்- குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த நாதிம் ஜஹாவி ஆகியோரும் பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் உள்ளனர்.

 இவரோடு தற்போது போட்டிக் களத்தில் இருக்கும் 8 பேரில் நான்கு பேர் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்கள். சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறையின் முன்னாள் அமைச்சர் ஜெரெமி ஹண்ட், வர்த்தகத்துறை இணை அமைச்சர் பென்னி மோர்டவுண்ட், வெளியுறவு விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர் டாம் டுகென்தட் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய 4 பேரும் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்களாக உள்ளனர். மீதமுள்ள 4 பேரில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவரான ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புகள் பிரகசமாக உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. மற்றொருவர் அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிரேவர்மேன். இதேபோல் நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த கெமி படேனோச், ஈராக்- குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த நாதிம் ஜஹாவி ஆகியோரும் பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் உள்ளனர்.

இவரோடு தற்போது போட்டிக் களத்தில் இருக்கும் 8 பேரில் நான்கு பேர் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்கள். சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறையின் முன்னாள் அமைச்சர் ஜெரெமி ஹண்ட், வர்த்தகத்துறை இணை அமைச்சர் பென்னி மோர்டவுண்ட், வெளியுறவு விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர் டாம் டுகென்தட் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய 4 பேரும் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்களாக உள்ளனர். மீதமுள்ள 4 பேரில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவரான ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புகள் பிரகசமாக உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. மற்றொருவர் அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிரேவர்மேன். இதேபோல் நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த கெமி படேனோச், ஈராக்- குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த நாதிம் ஜஹாவி ஆகியோரும் பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் உள்ளனர்.

தற்போது கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரிஷி சுனக் வாக்கெடுப்பில் பங்கேற்றால், அவர் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

ரிஷி சுனக் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், இங்கிலாந்து பிரதமராக பதவி வகிக்கும் ஆசியாவைச்சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை அவருக்கு கிட்டும்.

 நீடிக்கும் சஸ்பென்ஸ்

நீடிக்கும் சஸ்பென்ஸ்

பிரதமர் பதவிக்கான 8 பேரில் தங்கள் யாருக்கு என்பதை தெரிவிக்க கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் இன்று மீண்டும் வாக்களிக்க உள்ளனர். இதற்கான முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் என்பதால், அடுத்த சுற்றில் எத்தனை பேர் போட்டிக்களத்தில் இருப்பார்கள் என்பது ஏறத்தாழ ஊர்ஜிதமாகிவிடும் என்றே தெரிகிறது.

பல எம்.பிக்கள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டாலும், சில எம்.பிக்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

 இங்கிலாந்து புதிய பிரதமர்?

இங்கிலாந்து புதிய பிரதமர்?

பிரதமர் பதவிக்கான போட்டியில் களத்தில் நிற்கும் கடைசி இருவேட்பாளர்கள் யார்? என்பது வரும் 21-ந் தேதி தெரிந்து விடும். களத்தில் இறுதியாக இரண்டு வேட்பாளர்கள் போட்டிக்கு வந்த பிறகு, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவை திரட்டுவார்கள்.

ஒற்றை வாக்கு அடிப்படையில், வெற்றியாளர் இறுதியில் தேர்வு செய்யப்படுவர். அதிக வாக்குகள் பெறுபவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அறிவிக்கப்படுவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+