லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டயானா இல்லையே! எலிசபெத் மரணம்.. 8 பேரன், பேத்தி! 12 கொள்ளு பேரன் பேத்தி! யுகேவின் அடுத்த ராணி யார்?

Google Oneindia Tamil News

லண்டன்: யுனைட்டட் கிங்கிடமின் ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக பக்கிம்ஹாம் பேலஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து புதிதாக ராணி ஆக போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது

எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் இங்கிலாந்தின் விண்ட்சோர் இன்று பிற்பகல் பெய்த மழைக்கு பின்பாக இருந்தே ஆள் அரவமின்றி அமைதியாக இருந்தது. ஆனால் இப்படி அந்த பகுதி வெறிச்சோடி போக காரணம் மழை அல்ல.. ராணி எலிசபெத்!

இங்குதான் விண்ட்சோர் கேஸ்டல் இருக்கிறது. இங்குதான் மகாராணி எலிசபெத் II வசித்து வந்தார்.

இன்று பிற்பகல் 12 மணி அளவில் ராணி எலிசபெத் II திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. முக்கியமாக எலிசபெத் II உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து தாகவல்கள் வெளியாகின. இதையடுத்து எலிசபெத் உடனடியாக பலமோரல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார்.. புதிய மன்னராக பதவியேற்கும் மூத்த மகன் சார்லஸ்! பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார்.. புதிய மன்னராக பதவியேற்கும் மூத்த மகன் சார்லஸ்!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இது தொடர்பாக பக்கிம்ஹாம் பேலஸ் சார்பாக அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், எலிசபெத் II உடல்நிலை மோசமாக இருப்பதாகவும். அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்திய நேரப்படி இன்று மாலை 8 மணி அளவில் சில ஊடகங்கள் ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் உடனே அதை செய்தி நிறுவனங்கள் பின்பு மறுத்தன.

சந்தேகம்

சந்தேகம்

அதே சமயம் எலிசபெத் IIவை பார்க்க அவரின் உறவினர்கள் பலரும் தனி தனி விமானங்களில் வந்தனர். முக்கியமாக பிரின்ஸ் சார்ல்ஸ் ராணி எலிசபெத் இருக்கும் பலமோரல் பகுதிக்கு விமானத்தில் வந்தார். அதேபோல் மற்ற ராஜ் குடும்பத்தினரும் ராணியை சந்திக்க வருவதாக செய்திகள் வந்த. தனி தனி விமானங்களில் இவர்கள் ராணியை பார்க்க வந்தனர். அப்போதுதான் ராணி எலிசபெத் இறந்துவிட்டாரோ என்ற கேள்விகள் எழுந்தன.

அறிவிக்கப்பட்டது

அறிவிக்கப்பட்டது

அதோடு இங்கிலாந்தில் நாளை நடக்க இருந்த பல்வேறு அரசு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல் நாளை ராணியின் தனி பாதுகாவலர்கள் மாற்றப்பட வேண்டும்.இதற்கான மிகப்பெரிய விழாவும் நாளை நடக்க இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டது. இது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக பக்கிம்ஹாம் பேலஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து புதிதாக ராணி ஆக போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

யார்

யார்

பொதுவாக இங்கிலாந்து ராஜ் குடும்பத்தில் ராஜா - ராணியின் முதல் வாரிசுதான் ராஜா பதவிக்கு வருவார். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும். ராஜா - ராணியில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை அவர்களின் குழந்தைகள் ராஜா - ராணி பதவியை ஏற்க முடியாது. அந்த வகையில் இங்கிலாந்து ராஜா பிலிப் 2021ல் இறந்துவிட்டாலும், எலிசபெத் உயிரோடு இருந்ததால் அவரின் மகன் சார்ல்ஸ் ராஜா பதவியை ஏற்காமல் இளவரசராக இருந்தார். இந்த நிலையில்தான் எலிசபெத் II மரணம் அடைந்துள்ளார்.

அடுத்து யார்?

அடுத்து யார்?

இவர் 70 வருடமாக அங்கு ராணி பதவியில் இருந்தார். அங்கு நீண்ட காலம் ராணி பதவியில் இருந்தவர் எலிசபெத் IIதான். இவருக்கு 96 வயது ஆகிறது. இவருக்கு மொத்தம் 4 குழந்தைங்களை, 8 பேரக்குழந்தைகள், 12 கொள்ளுபேர குழந்தைகள் இருக்கிறார்கள். இவரின் மரணம் காரணமாக அவரின் மகன் சார்ல்ஸ் இங்கிலாந்தின் ராஜாவாகிறார். இவருக்கு வயது 73 ஆகிறது. இவரின் மனைவிதான் டயானா. ஆனால் அவர் டைவர்ஸுக்கு பின் 1997லேயே விபத்தில் இறந்துவிட்டார்.

வரலாறு

வரலாறு

டயானாவிற்கு பிறந்தவர்கள்தான் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி. இந்த நிலையில் டயானா மரணம் காரணமாக சார்ல்ஸ் கேமில்லா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தகேமில்லாதான் அங்கு தற்போது முடி இளவரசி. ஏனென்றால் இவர் ராணியின் மகனின் மனைவி. ராணி இறந்த காரணத்தால் தற்போது இவர் ராணியாகிறார். சார்ல்ஸ் இங்கிலாந்தின் ராஜாவாக தேர்வாகிறார். இவர்களுக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் டயானாவிற்கு பிறந்த வில்லியம் மற்றும் அவர் மனைவி கேத்ரீன் பதவிக்கு வருவார்கள்.

English summary
Who will be the next queen of the United Kingdom as Queen Elizabeth is no more?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X