போரிஸ் ஜான்சன் அவுட்.. பிரிட்டன் புதிய பிரதமர் யார்? இந்திய வம்சாவளி ரிஷி சுனக்-கிற்கு அடிக்கும் லக்?
லண்டன்: இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது வரும் செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது அதனை மீறி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதேபோல், பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முக்கிய பதவியில் நியமித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக, அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனா். மேலும், பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

போரிஸ் ஜான்சன் ராஜினாமா
இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான போரிஸ் ஜான்சன், பிரதமா் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அடுத்த பிரதமர் தோ்ந்தெடுக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை வகிக்கவிருப்பதாகவும் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். அதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரப்பூா்மாக அறிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ரிஷி சுனக் போட்டி
இங்கிலாந்தில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவா் வாக்கெடுப்பில் பங்கேற்றால், அவர் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தவிர, மேலும் பல எம்.பி.க்கள் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் சக்தி வாய்ந்த '1922 குழு' தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் தேர்வு முறைக்கான கால அட்டவணை மற்றும் விதிகளை நேற்று வகுத்துள்ளது.

புதிய விதிகள்
1922 குழுவின் தலைவரான கிரஹாம் பிராடி இது குறித்து கூறுகையில், "பிரதமர் தேர்வு முறை சுமூகமாகவும் விரைவாகவும் நடைபெறும் என்று நாங்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்" என்றார். நேற்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் புதிய விதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதன்படி, முதல் சுற்றில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கை பெற்றவர்கள் வெளியேற நேரிடும். இதில் 30-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் மட்டுமே முதல் சுற்றை கடக்க முடியும். அதன் பின்னர் எஞ்சிய வேட்பாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இறுதியில் இருவர் மட்டுமே எஞ்சியிருக்க, அவர்களுக்கு கட்சியின் சிறப்பு உறுப்பினர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

முதல் வாக்கெடுப்பு புதன்கிழமை
ரகசிய எழுத்துமுறையில் நடைபெறும் முதல் வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறும். இரண்டாவது சுற்று வியாழக்கிழமை நடைபெறும். இதிலும், கடும் போட்டி நிலவும் பட்சத்தில், அடுத்தகட்ட ரகசிய வாக்கெடுப்பு முறை அடுத்த வாரம் நடைபெறும். கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலான எம்.பிக்கள் இதுவரை தாங்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

செப்டம்பர் மாதம் 5ம் தேதி
களத்தில் இறுதியாக இரண்டு வேட்பாளர்கள் போட்டிக்கு வந்த பிறகு, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவை திரட்டுவார்கள். ஒற்றை வாக்கு அடிப்படையில், வெற்றியாளர் இறுதியில் தேர்வு செய்யப்படுவார். அதிக வாக்குகள் பெறுபவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அறிவிக்கப்படுவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications