திடீரென சைரன் சத்தத்துடன் அலறும் பல கோடி மொபைல்கள்.. பதறிய பொதுமக்கள்.. உண்மையில் என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் பிரிட்டன் நாட்டில் உள்ள பல லட்சம் மொபைல்கள் ஒரே நேரத்தில் அலற உள்ளது. அதற்கான காரணம் என்ன? ஒரே நேரத்தில் மொபைல்கள் அலற உள்ளது ஏன் என்று பார்க்கலாம்.

இந்த நவீனக் காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாமே மொபைல் இருந்தால் நிமிடங்களில் செய்துவிடும் சூழலே இங்கு இருக்கிறது. இதனால் பலருக்கும் வாழ்க்கை ஈஸியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

அந்தளவுக்கு இப்போது எல்லாமே டிஜிட்டல் வசமாகிவிட்டது. குறிப்பாக மொபைல் போன் ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இப்போது மொபைல் இல்லாமல் ஒருவரைப் பார்க்கவே முடியாது என்ற சூழலே இருக்கிறது.

 Why lakhs of UK Mobile are getting Emergency Alert System Today

நவீன யுகம்: மொபைல் இல்லையென்றால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது என்ற சூழலே இங்கு உள்ளது. பல நேரங்களில் நம்மை மொபைல் தான் காக்கிறது. ஆபத்தான இடங்களில் சிக்கியிருந்தால் கூட பல நேரங்களில் பலரை மொபைல் போன்கள் காப்பாற்றியுள்ளன. கொலை முதல் ஆட்கடத்தல் வரை பல வழக்குகளில் மொபைல் போன்களை வைத்தே இருப்பிடங்களையும் கண்டறிந்துள்ளனர்.

இதனிடையே பிரிட்டன் நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குப் பிரிட்டன் நாட்டில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் மொபைல்கள் அனைத்தும் அலற உள்ளது. மொபைல்கள் சைலெண்ட் மோடில் இருந்தாலும் சரி, நீங்கள் எந்தவொரு கேம் விளையாடிக் கொண்டிருந்தாலும் சரி 10 நொடிகளுக்கு போன் இடைவிடாமல் அலற உள்ளது. எதனால் இப்படி அனைத்து மொபைல்களும் ஒரே நேரத்தில் அலற உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

 Why lakhs of UK Mobile are getting Emergency Alert System Today

எச்சரிக்கை அலர்ட்: பிரிட்டன் இன்று தனது புதிய அவசரகால அலர்ட் சிஸ்டத்தை சோதனை செய்ய உள்ளது. அதன்படி இன்று பல லட்சம் மொபைல்கள் ஒரே நேரத்தில் பலத்த சத்தத்துடன் அலற உள்ளது. மேலும், வைபிரேஷனும் ஆக உள்ளது. மிகக் கடுமையான வானிலை குறித்த அலர்ட்களை நேரடியாக மக்களின் மொபைல்களுக்கு அனுப்பும் சோதனையின் முயற்சியாகவே இது செய்யப்படுகிறது. கடுமையான வெள்ளம், தீ உள்ளிட்ட காலங்களில் இது பயன்படுத்தப்படும்.

கனடா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்கள் அமலில் உள்ளன. ஆபத்தான இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, பொதுமக்களை எச்சரிக்கவே இதுபோன்ற அலர்ட் அமைப்புகள் உள்ளன. அலாரத்துடன் இன்று ஒரு மெசேஞ்சும் அனுப்பப்படும். அதாவது, "இது அவசர எச்சரிக்கையின் சோதனை, இது பிரிட்டன் அரசின் புதிய சேவையாகும்.. உயிருக்கு ஆபத்தான அவசரநிலை இருந்தால் உங்களை எச்சரிக்கும்" என்று மெசேஞ் வரும்.

 Why lakhs of UK Mobile are getting Emergency Alert System Today

எச்சரிக்கை: இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. சரியாக உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு அலாரம் அடிக்கும் என்பதால் அதற்கேற்ப திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 10 நொடிகள் வண்டி ஓட்டுவதைத் தவிர்க்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த டெஸ்டிங் வேண்டாம் என நினைத்தால், அதற்கேற்ப ஆப்ஷனை செலக்ட் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு அங்கே உள்ள பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் இது தேவையில்லாத முயற்சி என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஏற்கனவே, டிவி, இன்டர்நெட் மூலம் மக்களுக்கு போதிய செய்திகள் சென்று சேரவே செய்கிறது. அப்படியிருக்கும் போது, எதற்காகத் தேவையில்லாமல் இப்படி ஒன்று என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது மக்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதே அவர்கள் வாதமாகும்.

எதற்குப் பயன்படும்: மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் இடத்தின் அருகே இருக்கும் மொபைல் கோபுரங்களைக் கணக்கில் எடுத்து அதன் மூலம் எச்சரிக்கை அலர்ட் அனுப்பப்படும். அதேநேரம் இதில் எந்த எண்களுக்கு இவை செல்கிறது உட்பட தகவல்கள் சேகரிக்கப்படாது. இன்று மதியம் சைரன் அலர்ட் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் அலறும்..

வெள்ளம் உட்பட மிகவும் கடுமையான வானிலை காலத்தில் இதைத் தொடக்கத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தாலும், அதன் பிறகு பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இதைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+