நிர்வாணப்படுத்தி.. சிறுநீரை குடிக்க வைத்து இந்துக்கள் 2 பேரை கடத்தி சித்ரவதை செய்த கும்பல் - பகீர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்விரோதத்தில் 2 இந்து இளைஞர்களை காரில் கடத்திய கும்பல் அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் ராம்கான் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சந்தன் மவுரியா. இவர் தனது உறவினர் மோஹித் மற்றும் நண்பர் அன்னு ஆகியோரடன் பிறந்தநாள் விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பைகா கிராமத்தை சேர்ந்த சகாபூதின் என்பவர் 2 பேருடன் வந்து வழிமறித்தனர். அதன்பிறகு அனாஸ், ஜிஜான் ஆகியோர் சகாபூதினுடன் கைகோர்த்தனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து சந்தன் மவுரியா மற்றும் மோஹித் ஆகியோரை தாக்கி காரில் கடத்தினர்.
அதன்பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சந்தன் மவுரியா, மோஹித் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். இரும்பு கம்பி, உருட்டு கட்டையை வைத்து கொடூரமாக தாக்கினர். இதனால் இருவரும் கதறினர். குடிக்க தண்ணீர் கேட்டும் அவர்கள் வழங்காமல் கொடூரமாக தாக்கினார். தொடர்ந்து தண்ணீர் கேட்டு கதறியதால் அவர்கள் சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டி ‛இஸ்லாம் ஜிந்தாபாத்' என கோஷமிட வைத்துள்ளனர். அதன்பிறகு அவர்களை விட்டு சென்றனர். புகாரளித்த சந்தன் தரப்பில், ‛‛இந்து பெண்களை குறிவைத்த இன்ஸ்டாகிராமில் ஒரு கும்பல் வலைவிரிக்கிறது. இதற்காக பாபா குரூஅப் என்ற குழு செயல்படுகிறது.
இதில் பலரும் இந்து என்று கூறி இந்து பெண்களை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இவர்களில் பலரும் விலையுயர்ந்த கார்கள், பொருட்களை வைத்துள்ளனர்'' என்றார். சந்தன் மவுரியா சார்பில் ராம்கான் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி துர்கா பிரசாத் திவாரி கூறுகையில், ‛‛முதற்கட்ட விசாரணையில் இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து கொண்டனர். சகாபூதீன், அனாஸ், ஜிஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதம்சார்ந்த கோஷம் எழுப்ப கூறியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இதுபற்றியும் விசாரித்து வருகிறோம்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications