கூட்டு வன்புணர்வு செய்த 5 பேர்.. ஆடையின்றி 2 கிமீ நடந்தே போன சிறுமி.. வேடிக்கை பார்த்த உ.பி மக்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, நிர்வாணமாக இரண்டு கிலோ மீட்டர் நடக்க விடப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் உத்தர பிரதேசத்தில் அடிக்கடி நடக்கின்றன.
குறைந்தது ஒரு கூட்டு வன்புணர்வு சம்பவமாவது வாரம் ஒரு முறை உத்தர பிரதேசத்தில் நடக்கிறது. இந்த நிலையிலதான் நேற்று நடைபெற்ற சம்பவம் ஒன்று நாட்டையே உலுக்கி உள்ளது.

என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு 15 வயது சிறுமி ஒருவர் 5 ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் வன்புணர்வு செய்யப்பட்டு மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதன்பின் 2 கிமீ அந்த சாலையில் அவர் நடந்து சென்றுள்ளார். உடை இல்லாமல் நிர்வாணமாக 2 கிமீ அந்த சாலையில் சிறுமி நடந்து சென்றுள்ளார். மோராதாபாத் - தகுர்வாரா சாலையில் இவர் நிர்வாணமாக நடந்ததாக கூறப்படுகிறது.

உதவி செய்யவில்லை
பல ஆண்கள், பெண்கள் அந்த சாலையில் இருந்துள்ளனர். பல வீடுகள் அந்த சாலையில் இருந்துள்ளன. ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவி செய்ய வரவில்லை. சில ஆண்கள் அந்த சிறுமி நிர்வாணமாக வருவதை வேடிக்கை பார்த்து உள்ளனர். சில ஆண்கள், அதை அங்கேயே போன் மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அவரின் உடலில் ஆங்காங்கே ரத்தம் இருந்துள்ளது. ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை.

ரத்தம்
வீட்டிற்கு வரும் போது அந்த சிறுமியின் பெண் உறுப்பில் ரத்தமாக இருந்துள்ளது. உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்துள்ளது. அந்த சிறுமியின் உடையை கிழித்து, 5 பேர் அவரை வன்புணர்வு செய்துள்ளனர். அதன்பின் கிழிந்த உடையை கூட அணிந்து கொள்ள விடாமல் அதையும் தூக்கிக்கொண்டு ஓடி உள்ளனர். அந்த சிறுமி பக்கத்து ஊரில் உள்ள கண்காட்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அதை பார்த்துவிட்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

கொடுமை
என்ன அந்த சிறுமியை வன்புணர்வு செய்யும் போது அவர் காப்பாற்றுங்கள் என்று கத்தி இருக்கிறார். இந்த சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்தே அந்த 5 பேரும் சிறுமியின் உடையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடி உள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மாவட்ட எஸ்பியிடம் அவரின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications