மீண்டும் உ.பி.யில் யோகி ”சர்க்கார்”.. ரெடியாக துப்பாக்கிகள்.. உயிருக்கு பயந்து சரண்டராகும் தாதாக்கள்
லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்து உள்ள நிலையில் என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து கடந்த வாரத்தில் சுமார் 50 ரவுடிகள் போலீசிடம் சரணடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.
மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

உபியில் மீண்டும் யோகி
தேர்தல் பிரச்சாரத்தின்போது உபியின் பாஜக முகமாக கருதப்பட்ட யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான போதே அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில் அவர் தான் மீண்டும் முதல்வர் என்பது 100% உறுதியானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்.

உபியின் சட்டம் ஒழுங்கு
2017 ஆம் ஆண்டிலும் சரி 2022 ஆம் ஆண்டிலும் சரி பாஜகவின் முக்கிய பிரச்சார பாணியாக இருந்தது உபியின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை. கடந்த முறை நடைபெற்ற தேர்தலின்போது உபியில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்களது கொட்டம் அடக்கப்படும் என பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சொன்னது போலவே 2017ஆம் ஆண்டில் பதவியேற்ற பின்னர் யோகி ஆதி தலைமையிலான அரசு ஏராளமான என்கவுண்டர் களை நடத்தி கிரிமினல்களை சுட்டுத் தள்ளியது.

என்கவுண்டர் அச்சம்
கிரிமினல்களின் வீடுகள் இடிக்கப்பட்டதோடு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் போது இதே வாதத்தை முன்வைத்தார் யோகி. மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு காரணம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் 15 நாட்களில் சுமார் 50 கிரிமினல்கள் என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து காவல்துறையில் சரண்டர் ஆகி உள்ளனர்.

சரண்டர் ஆகும் ரவுடிகள்
கோண்டா பகுதியைச் சேர்ந்த கிரிமினலான கௌதம் சிங் என்பவர் என்னை சுடாதீர்கள் நான் சரணடைகிறேன் என்று எழுதப்பட்ட பதாகைகளை மாட்டிக் கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். கடந்த 15 நாட்களில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில் தற்போது சரணடையும் கிரிமினல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்












Click it and Unblock the Notifications