அப்படியே சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விபத்து நடந்திருக்கிறது. மீரட்டின் ஜாகிர் நகர் பகுதியில் நேற்று மாலை 5.50 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீடு பால் பண்ணையாருக்கு சொந்தமானதாகும். விபத்து நடந்த உடன், மீட்பு பணிகளுக்காக போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 12 எருமை மாடுகளும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர். விபத்து நடந்த இடம் குறுகலான பகுதி என்பதால், அப்பகுதிக்குள் ஜேசிபி போன்ற மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே வர முடியாமல் தவித்திருக்கின்றன. எனவே நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கூறுகையில், "விபத்து நடந்த கொஞ்ச நேரத்திலேயே நாங்கள் இந்த பகுதிக்கு வந்துவிட்டோம். மொத்தம் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளனர்.
கட்டிட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications