மோடியை விடாத கேசிஆர்.. மம்தா பாணியில் உ.பியில் களமிறங்க "மெகா" பிளான்.. அகிலேஷுக்கு அடிக்கும் லக்!
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவாக தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக ஆக்சன் அரசியல் பாணியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கையில் எடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த அதே அஸ்திரத்தை தற்போது கேசிஆர் எடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசின் பட்ஜெட்டை கேசிஆர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல் பிரதமர் மோடியையும் கேசிஆர் விமர்சனம் செய்தார்.

விமர்சனம்
பிரதமர் மோடியை விமர்சனம் செய்த சந்திரசேகர ராவ், பிரதமர் மோடிக்கு மேக் அப் போடவே நேரம் சரியாக இருக்கிறது. பஞ்சாப் சென்றால் டர்பன், தமிழ்நாடு வந்தால் லுங்கி என்று தோற்றத்தை மாற்றுகிறார். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவருக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு பிரதமரை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள். பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வையே இல்லை. பொது மக்களையும், ஏழைகளையும் பற்றி பிரதமர் மோடி நினைப்பதே இல்லை.

பிரதமர் மோடி
மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மை கொண்டு இருக்கிறார். பாஜகவிற்கு வெட்கம் இல்லை. அந்த கட்சியை வங்கக்கடலில் வீசி எறிந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பிரதமர் மோடிக்கு விதவிதமாக தொப்பி போடவே நேரம் சரியாக இருக்கிறது. நாடு முழுக்க பாஜகவை தூக்கி வீச வேண்டும், என்று பிரதமர் மோடிக்கு எதிராக கேசிஆர் பேசினார்.

மம்தா
மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை எப்படி விமர்சனம் செய்வாரோ அதே போல் பிரதமர் மோடியை கேசிஆர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். அது மட்டுமின்றி மம்தா பானர்ஜியை போலவே நேற்று பிரதமர் மோடியை அழைக்கமால் கேசிஆர் தவிர்த்தார். நேற்று ராமானுஜர் சிலையை திறக்க பிரதமர் மோடி ஹைதராபாத் வந்தார். ஆனால் அவரை அழைக்க கேசிஆர் செல்லவில்லை. பிரதமர் மோடியை விமானம் நிலையத்திலிருந்து அழைத்து வர முதல்வர் செல்வதே வழக்கம்.. ஆனால் நேற்று கேசிஆர் செல்லவில்லை.

கேசிஆர் மோடி
இதற்கு முன்பே மம்தா பானர்ஜி இப்படி செய்துள்ள நிலையில் இப்போது கேசிஆரும் அதே பாதையை பின்பற்றி உள்ளார். இது போக தற்போது உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவாக தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக உத்தர பிரதேசத்தில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி வரும் 8ம் தேதி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

பிரச்சாரம்
அதன்படி கேசிஆர் 10ம் தேதிக்கு பின்பாக அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் விரைவில் உத்தர பிரதேசம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உத்தர பிரதேசத்தில் அகிலேஷுக்கான ஆதரவு அதிகரிக்க தொடங்கி உள்ளது. மம்தா மற்றும் கேசிஆரின் இந்த திடீர் முடிவுகள் தேசிய அளவில் புதிய கூட்டணி உருவாவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
ஹிட்லர் உத்வேகம்... வடக்கிற்கு எதிரான போர்க்கொடி! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சால் புயல் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications