உ.பி வளர்ச்சிக்கு 'சிவப்பு' மாஃபியாக்களுக்கு 'பச்சை' விளக்கை காட்டுவார் அகிலேஷ் - அமித்ஷா தாக்கு
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநில வளர்ச்சிக்கு சிவப்பு விளக்கையும், மாஃபியாக்களுக்கு பச்சை விளக்கையும் காட்டுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
லக்னௌ: அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தால் சிவப்பு-பச்சை விளக்கு விளையாட்டை விளையாடுவார் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முன்னாள் தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார். மாநில வளர்ச்சிக்கு சிவப்பு விளக்கையும், மாஃபியாக்களுக்கு பச்சை விளக்கையும் காட்டுவார் என்றும் அகிலேஷ் யாதவை கடுமையாக தாக்கியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டசபையாகவும் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் நடந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக வெல்லும் என்று கருத்துக்கணிப்புகளில்கூட யாரும் கணிக்கவில்லை. தங்களை எதிர்த்து நின்ற கட்சிகளின் அத்தனை வியூகங்களையும் உடைத்து நொறுக்கி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது பாஜக. இம்முறையும் பாஜகவிற்கே வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அனல் பறக்கும் பிரச்சாரம்
முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பிரசார களத்தில் அனல் பறக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் கூட்டங்களில் பேசும் போது காங்கிரஸ் கட்சியையும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவையும் கடுமையாக சாடினார். காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்து, நமது ராணுவ வீரர்களின் தலையை துண்டித்தது. அப்போது பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் செய்யவில்லை.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
ஆனால் உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி 10 நாட்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழித்தார் என்று தெரிவித்தார் அமித் ஷா. தொடர்ந்து பேசிய அவர், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜின் மருமகன்-அத்தை ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் மாஃபியா மையமாக மாறியது. இப்போது உத்தர பிரதேசத்தின் வெளியே, புடாவுன் சிறை அல்லது சமாஜ்வாடி வேட்பாளராக 3 இடங்களில் மட்டுமே மாஃபியாக்கள் உள்ளனர்.

சிவப்பு பச்சை விளையாட்டு
கடந்த 3 ஆண்டுகளில் ஆசம் கானை, முக்தார் அன்சாரியை யாராவது பார்த்தது உண்டா? என்று கேள்வி எழுப்பிய அவர், அகிலேஷ் யாதவ் சிவப்பு-பச்சை விளக்கு விளையாட்டை விளையாடுவார். அவர் வளர்ச்சிக்கு சிவப்பு விளக்கையும், மாஃபியாக்களுக்கு பச்சை விளக்கையும் காட்டுவார் என்று அவர் தெரிவித்தார்.

பாகுபலி ஆட்சியில் இருந்து பஜ்ரங்பலி ஆட்சி
அவர்கள் அனைவரும் பாகுபலிக்கள். மாஃபியாக்கள் மட்டுமே அகிலேஷ் யாதவ் ஆட்சி காலத்தில் வளர்ச்சியடைந்தனர். யோகி ஆதித்யா நாத் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பஜ்ரங்பலி ஆட்சி நடக்கிறது. அமைதியும் வளமும் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சிவப்பு தொப்பி
ஏற்கனவே மோடி அகிலேஷ் யாதவின் தொப்பியை பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளார். உத்தர பிரதேசம் முழுவதும் சிவப்பு தொப்பிகள் சிவப்பு விளக்குகளை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்தன என்பது தெரியும். உங்கள் வலிக்கும், பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். இப்போது அமித் ஷா சிவப்பு, பச்சை விளக்கு என்று கூறியுள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications