கேட்டுச்சா.. அமித்ஷாவே சொல்லிட்டாரு.. 300 இடங்களில் ஜெயிக்க போகிறதாம் பாஜக.. விழிக்கும் அகிலேஷ்?
உ.பி. தேர்தலில் 300 இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியை அமைக்க போகிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியினருக்கு லேசான கலக்கம் சூழ்ந்து வருகிறது.
உபியில் சட்டசபை தேர்தல் சூட்டை கிளப்பி கொண்டிருக்கும் நிலையில், பாஜக ஆட்சியை முடிவுக்குகொண்டு வர பிரதான எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளன.
அதாவது முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியும், பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிராக கட்சிகள், பாஜகவை விமர்சிக்க மும்முரமாகி கொண்டிருக்கின்றன..

பாஜக அமித்ஷா
குறிப்பாக, யோகி ஆட்சியில் விவசாயிகள் பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள், விலைவாசி உயர்வு, கொரோனாவை கையாள தவறியது போன்றவைகளை குறித்து தங்கள் பிரச்சாரங்களை துவங்கி உள்ளன.. ஆனால், இவைகளுக்கு எதிராக பாஜக எந்த மாதிரியான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது என்பது அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

உபி அரசியல்
கடந்த 2017ம் ஆண்டு நடந்த உபி சட்டசபை தேர்தலை எடுத்து கொண்டால், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தது.. பிரதான எதிர்க்கட்சியான பிஎஸ்பி போன்ற போட்டி கட்சிகள் ஒருங்கிணைந்து, சட்டம் ஒழுங்கு, ஊழல் பிரச்சனைகளை அகிலேஷூக்கு எதிராக கையில் எடுத்தன.. இதில் பெருமளவு சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான் அகிலேஷை சாய்க்க காரணமாகவும் இருந்தன.. குறிப்பாக, முசாபர்நகர் கலவரத்தை கையில் எடுத்த பாஜக, முஸ்லிம்களின் ஓட்டுக்களுக்கு குறி வைத்து பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

அமித்ஷா
இந்த முறை தேர்தலிலும் கிட்டத்தட்ட பாஜக இதே பாணியை தான் கையில் எடுத்துள்ளது.. மறுபடியும் அகிலேஷ் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் யோகி என ஒருத்தர் விடாமல் அகிலேஷ் மீது பாய்ந்து வருகின்றனர்.. மற்றொரு புறம், தாங்கள் இந்த 5 வருடங்களில் செய்த சாதனைகள் மற்றும் இந்துத்துவா.. இந்த 2 மாபெரும் ஆயுதங்களைதான் பாஜக மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறது.

அமித்ஷா பேச்சு
அந்த நம்பிக்கையில்தான் வரப்போகும் தேர்தலில் உபியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில், பாஜக வெற்றி பெறும் என்று அமித்ஷாவே சொல்லி உள்ளார்.. கோரக்பூர் மாவட்டத்தில் நடந்த பாஜக பிரசாரக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: "இந்த தேர்தலில், மறுபடியும் வரலாறு திரும்பத்தான் போகுது.. 2014, 2017, 2019 இந்த வருடங்களில் நடந்த தேர்தல்களில், பிரதமர் மோடியின் தலைமையிலான ஆளுமைக்கே மக்கள் ஓட்டு போட்டார்கள்.. இப்போதும் அதே போலதான் வரலாறு திரும்ப போகிறது.

அமித்ஷா நம்பிக்கை
இன்று கோரக்பூரில் முதல்வர் யோகி வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.. அவரது தலைமையில் இந்த உபியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியை அமைக்கத்தான் போகிறது.. உத்தரபிரதேசம் வளர்ச்சி அடையாவிட்டால், இந்த நாடே வளர்ச்சி அடையாது என்று பிரதமர் மோடி அடிக்கடி சொல்லுவார்.. அதனாலேயே இந்த உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக கடுமையான பணியாற்றியிருக்கிறது.. நான் என்ன சொல்கிறேன், வரப்போகும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மக்களாகிய நீங்கள்தான் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications