உ.பி.யில் பாஜக ருத்ரதாண்டவம்.. 17 மேயர் பதவிகளையும் கைப்பற்றியது.. டபுள் வெற்றி- பூரிக்கும் யோகி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 199 நகர் பலிகா பரிஷத்கள், 544 நகர் பஞ்சாயாத்து பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 17 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் 4 ஆம் தேதி நடந்தது. 2 வது கட்ட தேர்தல் 11 ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 17 மாநகராட்சிகள், 199 நகர் பலிகா பரிஷத்கள், 544 நகர் பஞ்சாயாத்து பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அங்குள்ள 17 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
"கடந்த 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது பாஜக இரு மடங்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக அரசு, நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும்" என்றார்.
மேயர் பதவிகளில் மொத்தமாக பாஜக வெற்றி பெற்றாலும் நகராட்சி பதவிகளில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியும், பிஎஸ்பி கட்சியும் பாஜவுக்கு கடும் போட்டி கொடுத்து வருகின்றன. மொத்தமுள்ள 199 நகராட்சி இடங்களில் பாஜக 65 இடங்களிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 53 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனல் பறக்கும் பிரசாரங்களை மேற்கொண்டு இருந்தார். அப்போது உத்தர பிரதேசமும் நமது நாடும் பாஜக ஆட்சியின் கீழ் பெரும் மாற்றத்தை சந்தித்து உள்ளது. பிரிவினைவாதம், பயங்கரவாதம், நக்சலிசம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க பாஜக அரசு பணியாற்றி வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதால் இந்தியாவின் மதிப்பும் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது" என்று கூறியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications