எகிறி அடித்த பாஜக.. உ.பியை வாரி சுருட்டி.. ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் அசத்தல்! க்ளீன் ஸ்வீப்: ஜீ டிவி

உபியில் பாஜக ஆட்சியே நடக்கும் என்று அனைத்து எக்ஸிட் போல்களும் தெரிவிக்கின்றன

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பாஜகவே உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஜீ நியூஸ் எக்ஸிட் போல், உபியின் ஒவ்வொரு கட்ட வாரியாக முடிவுகளை வெளியிட்டுள்ளது..

உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கான 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்து முடிந்தது. உ.பி. மட்டுமின்றி 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2 மாதங்களாக நடந்து முடிந்தது.

 பிந்தைய கணிப்பு

பிந்தைய கணிப்பு

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது... 4 முனை போட்டி என்றாலும், இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும்தான் நேரடி போட்டி ஏற்பட்டது.

 கணிப்புகள்

கணிப்புகள்

இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில், பிரபல செய்தி நிறுவனங்கள் எக்ஸிட் போல்- Exit Poll' எனும் தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பை வெளியிட்டன. அனைத்து கணிப்புகளிலும் பெரும்பான்மையான இடங்களில் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.. அதேபோல அனைத்து தொகுதிகளிலும் 2ம் இடத்தில் சமாஜ்வாதி கட்சியே பின்தொடர்ந்து வருகிறது. 3வதாக பகுஜன்சமாஜ் கட்சியும், 4வதாக காங்கிரஸ் என அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. ஆக மொத்தம் இந்த எக்ஸிட் போல்கள் கணக்குப்படி பாஜக ஆட்சியே மீண்டும் உபியில் மலரும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.

 ஜீ நியூஸ்

ஜீ நியூஸ்

இந்நிலையில், ஜீ நியூஸ் எக்ஸிட் போல் ஒவ்வொரு கட்ட வாரியாக முடிவுகளை வெளியிட்டுள்ளது.. முதல் கட்டமாக தேர்தல் நடந்த 58 தொகுதிகளில் பாஜக 34-38 இடங்களை பெறும் என்றும், சமாஜ்வாதி 19-21 இடங்களையும், பகுஜன் சமாஜ் 01-02 இடங்களையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.. 2-ம் கட்ட தேர்தல் நடந்த 55 தொகுதிகளில் பாஜக 21- 23 இடங்களையும், சமாஜ்வாதி 29- 33 இடங்களையும், பகுஜன் சமாஜ் 1-2 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 சமாஜ்வாதி

சமாஜ்வாதி

3-ம் கட்டமாக தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பாஜக 39-42 இடங்கள் வரை பெற்றுள்ளது.. சமாஜ்வாதி 17-19, இடங்களும், காங்கிரஸ் 1-2 இடங்களையும் பெற்றுள்ளது.. 4-ம் கட்டமாக தேர்தல் நடந்த 59 தொகுதிகளில். பாஜக 41-45 தொகுதிகளையும், சமாஜ்வாதி 14-16 இடங்களையும், பகுஜன் சமாஜ் 1 இடத்தையும் பெற்றுள்ளது.

 7 கட்டங்கள்

7 கட்டங்கள்

5-ம் கட்டமாக தேர்தல் நடந்த 61 தொகுதிகளில் பாஜக 36-40 இடங்களிலும், சமாஜ்வாதி இடங்களிலும், 18-20 காங்கிரஸ் இடங்களையும், இதர 1-3 இடங்களையும் பெற்றுள்ளன. 6-ம் கட்டமாக தேர்தல் நடந்த 57 தொகுதிகளில் பாஜக 30-34 தொகுதிகளையும், சமாஜ்வாதி 19-22 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் 1-3 தொகுதிகளையும் காங்கிரஸ் 1-3 தொகுதிகளையும் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.. 7-ம் கட்டமாக தேர்தல் நடந்த 54 தொகுதிகளில், பாஜக 23-27 இடங்களையும், சமாஜ்வாதி 22-26 இடங்களையும், பகுஜன் சமாஜ் 1-3 தொகுதிகளையும், காங்கிரஸ் 1-2 மற்றும் இதர 1-3 இடங்களையும் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+