Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிரிகள் இனி காலி.. ஆண்டுக்கு 100 பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு! மையம் திறந்த இந்தியா.. சிறப்பே இதுதான்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: எதிரி நாடுகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கம் அதிக சக்தி கொண்ட பிரமோஸ் ஏவுகணையை நம் நாடு, ரஷ்யாவுடன் சேர்ந்து தயாரித்தது. இந்த ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தானின் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் தான் பிரேமாஸ் ஏவுகணையை தயாரிக்கும் புதிய யூனிட்டை உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இங்கு ஆண்டுக்கு 80 முதல் 100 ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளதால் இனி நம் நாட்டை எதிரிகளால் சீண்ட முடியாது. இந்த பிரமோஸ் ஏவுகணை என்பது என்ன? பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. நேற்றை தினம் நம் நாடு ஏவுகணையை வீசி பாகிஸ்தானின் முக்கிய 3 விமானப்படை தளங்களை அழித்தது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான், ஷார்காட்டில் உள்ள ரஃபிக்கி விமான தளம் மற்றும் சாக்வால் பகுதியில் உள்ள முரித் விமானதளங்கள் மீது நம் நாடு அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

brahmos-manufacturing-unit-unveiled-in-lucknow-it-will-produce-80-100-missiles-a-year

இந்த தாக்குதலுக்கு நம் நாடு பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தி தான் இந்தியா துல்லியமான தாக்குதல் நடத்தி தங்களின் விமானப்படை தளங்களை அழித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இருநாடுகள் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டது.

அதில் ‛‛"சர்வதேச எல்லையைத் தாண்டி பல இடங்களில் பிரமோஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டது. இதையடுத்து ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51ன் கீழ் தற்காப்புக்காக நாங்கள் பதிலடி கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இதனால் "ஆபரேஷன் பன்யான்-உல்-மர்சூஸ்" என்ற பெயரில் தாக்கினோம்'' என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும் பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது பற்றி நம் நாட்டின் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே தான் பிரமோஸ் ஏவுகணையின் தொழிற்சாலை யூனிட்டை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு யூனிட் என்பது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி மூலம் இன்று ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த யூனிட் என்பது மொத்தம் 300 கோடி செலவில ்அமைக்கப்பட்டுள்ளது. ‛டிபென்ஸ் இன்டஸ்ட்ரியல் காரிடார்' என்பதன் ஒருபகுதியாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலைக்கான அறிவிப்பு என்பது கடந்த 2018 ம் ஆண்டில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு அடிக்கல் என்பது கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடியால் நடப்பட்டது. தற்போது பிரமோஸ் உற்பத்தி மைய யூனிட்டின் பணி முடிவடைந்து அது திறக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ‛டிபென்ஸ் காரிடார் திட்டத்தின்' கீ் மொத்தம் 1,600 ஹேக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதில் 80 ஏக்கரில் பிரமோஸ் ஏவுகணை யூனிட் என்பது அமைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் டிஆர்டிஓ (Defence Research and Development Organisation) மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோயேனியா (NPO Mashinostroyeniya) கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டை பாதுகாப்பு துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். ஏனென்றால் பிரமோஸ் ஏவுகணை என்பது அதிக சக்திவாய்ந்தது. எதிரி நாடுகளில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் சக்தி கொண்டது.

இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 80 முதல் 100 பிரமோஸ் ஏவுகணை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இனி எதிரிகளால் நம் நாட்டை நெருங்க முடியாது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் நம்மை சீண்டினால் பிரமோஸ் ஏவுகணையை வைத்து நம்மால் அவர்களை துல்லியமாக தாக்க முடியும்.

இந்த பிரமோஸ் ஏவுகணை என்பது நம் நட்பு நாடான ரஷ்யாவுடன் சேர்ந்து உருவாக்கப்படுகிறது. நம் நாட்டின் 60 சதவீத ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவின் தயாரிப்பாக உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரமோஸ் ஏவுகணையும் அதில் இணைய உள்ளது. நம் நாட்டில் உள்ள பிரம்மபுத்திரா ஆறு மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா ஆறு ஆகியவற்றின் பெருமையை கூறும் வகையில் பிரமோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை என்பது 290 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது. அதோடு மாக் 2.8 என்ற வேகத்தில் செல்லும் தன்மை கொண்டது. அதாவது ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு மின்னல் வேகத்தில் சீறிப்பாயக்கூடியது தான் இந்த ஏவுகணை. மேலும் எதிரிகளின் எந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்பாலும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியாது. இதனால் இந்த ஏவுகணை என்பது நம் நாட்டில் இருந்து புறப்பட்டால் நேரடியாக எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. எந்த கருவியாலும் இடைமறிக்க முறியாதது தான் இந்த ஏவுகணையின் சிறப்பு ஆகும்.

இந்த ஏவுகணையை பிலிப்பைன்ஸ் , வியட்நாம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவை வாங்க ஆர்வமாக உள்ளன. இதுதவிர பல நாடுகள் இந்த ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ளன. மேலும் சமீபத்தில் தான் பிரமோஸ் II ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கும் பணியை தொடங்க நம் நாடும், ரஷ்யாவும் திட்டமிட்டது. இந்த ஏவுகணை 1,500 கிலோமீட்டர் ரேஞ்சை கொண்டதாக இருக்கும். இதன்மூலம் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை பிரமோஸ் II ஹைப்பர்சோனிக் ஏவுகணையால் எளிதாக தாக்கி அழிக்க முடியும்.

இந்த ஏவுகணை பிரமோஸ் I யை விட அதிக சக்தி கொண்டது. ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு வரை செல்லும். அதாவது மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில் ஏவுகணை சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த பிரமோஸ் II ஏவுகணை என்பது ரஷ்யாவின் ஜிர்கான் டெக்னாலஜியை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், விமானத்தில் சுமந்து சென்று தாக்க வைக்க முடியும். அதேபோல் நிலத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை பயன்படுத்தி எதிரிகளை குறிவைத்து தாக்க முடியும். குறிப்பாக அண்டை நாடான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் எந்த பகுதியை வேண்டுமானாலும் குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 5 முதல் 8 நிமிடத்தில் இந்த பிரமோஸ் II ஏவுகணையை சீனா, வங்கதேசம், பாகிஸ்தானில் உள்ள இலக்கை நோக்கி தாக்க முடியும்.

இந்த பிரமோஸ் II ஏவுகணை தயாரிக்கும் பணி தான் தற்போது மும்முரமாக நடந்து வரும் நிலையில் தற்போது லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது பிரமோஸ் II ஏவுகணை தயாரிப்பு பணியை இன்னும் விரைவுப்படுத்த வாய்ப்பாக அமைவதோடு இந்த பிரமோஸ் II ஏவுகணையை 2027-2028 ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் என்பது பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்தை கதிகலங்க வைக்கும் என்கின்றனர் டிபென்ஸ் வல்லுநர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+