முதலிரவு முடிந்த மறுநாள் பெண்ணுக்கு பிறந்த குழந்தை.. மாப்பிள்ளை தான் காரணமாம்.. இது என்ன வினோதம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நமது ஊரில் பெரும்பாலானோர் திருமணமான உடனேயே குழந்தைக்கான திட்டமிடலைத் தொடங்குவார்கள். திருமணத்திற்குப் பிறகு ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், இங்கு வினோதமாகத் திருமணமான இரண்டாவது நாளே மணமகள் குழந்தை பெற்று இருக்கிறார். இதற்கு அந்த மாப்பிள்ளை தான் காரணம் என்று கூறி அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது.

offbeat India marriage

இருப்பினும், திருமண கொண்டாட்டம் முடிந்து இரண்டாவது நாளில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தச் சம்பவமே அந்த குடும்பத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

கடந்த பிப்ரவரி 24ம் தேதி அந்த இளைஞனின் திருமண ஊர்வலம் ஜஸ்ரா கிராமத்தில் வெகு சிறப்பாக நடந்துள்ளது... மணமகளின் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வெகு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தனர். தொடர்ந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமண கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. நள்ளிரவைத் தாண்டியும் கூட கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. மறுநாள், பிப்ரவரி 25ம் தேதி மணமகள் தனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அன்றைய தினமும் புது மணத் தம்பதியினர் மகிழ்ச்சியாகவே நேரத்தைக் கழித்துள்ளனர். அக்கம்பக்கத்தினரும் புதுமண தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைக் கூறியுள்ளனர். மறுநாள் காலையும் கூட அந்த பெண் வழக்கம் போல அதிகாலை எழுந்து வீட்டு வேலைகளை செய்துள்ளார். அன்று மாலை தான் அந்த பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அந்த பெண்ணை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கர்ப்பம்

அந்த பெண்ணின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி உடல்நிலை மோசமாக இருப்பதால் உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் அந்த பெண்ணுக்குக் குழந்தையும் பிறந்துள்ளது.

மாப்பிள்ளை தான் காரணம்

அந்த பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதாக மணமகனின் பெற்றோர் சாடியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை தங்கள் மணமகளாக ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளனர். ஆனால், பெண்ணின் தந்தையோ வேறு விதமாகக் கூறுகிறார். அவர் கூறுகையில், "இவர்களுக்குக் கடந்தாண்டு மே மாதமே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் பிறகு இருவரும் அவ்வப்போது சந்தித்துள்ளனர். இதன் காரணமாகவே எனது மகள் கர்ப்பமடைந்து இருப்பார்" எனச் சொல்லியிருக்கிறார்.

திட்டவட்டமாக மறுப்பு

ஆனால், அந்த மாப்பிள்ளையோ இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தங்கள் திருமணம் நான்கு மாதங்களுக்கு முன்பு அக்டோபரில் தான் நிச்சயிக்கப்பட்டது என்றும் அந்த பெண்ணை மனைவியாக ஏற்கும் மனநிலையில் தான் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், "திருமணத்திற்குச் செலவு செய்த பணம் கூட வேண்டாம். ஆனால், நாங்கள் பெண் வீட்டாருக்குக் கொடுத்த பரிசுகளைத் திரும்பத் தர வேண்டும். அவர்கள் பெண்ணையும் அழைத்துச் செல்லலாம்" என்று கூறுகிறார்.

இருப்பினும் தங்கள் பெண்ணின் கர்ப்பத்திற்கு மாப்பிள்ளையே காரணம் எனச் சொல்லும் பெண் வீட்டார், "அவர்கள் ஏற்கனவே வரதட்சணையாக அது எது என எல்லாம் வாங்கிவிட்டனர். இப்போது எனது மகளைக் கைவிடுவது சரியான போக்கு இல்லை.. அவர்கள் எங்கள் மகளை ஏற்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+