கும்பமேளாவில் பலநூறு கோடி மோசடி செய்த யோகியின் உ.பி அரசு.. சி.ஏ.ஜி அறிக்கையில் அம்பலம்!
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளா உலக பிரசித்தி பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கும்பமேளாவில் மோசடி
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்து வரும் பாஜக அரசு கும்பமேளாவுக்கு பல ஆயிரம் கோடி கோடியாக பணத்தை கொட்டியது. பல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பமேளா நடத்தப்பட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசு கும்பமேளாவுக்கு நிதி ஒதுக்கியதில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் கும்பமேளா திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கையில் கூறியுள்ளது.

தவறான நிதி ஒதுக்கீடு
2019 ஆம் ஆண்டு கும்பமேளாவுக்கான மீட்பு உபகரணங்களை வாங்குவதற்காக மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (SDRF) ரூ. 67.87 கோடியை உத்தர பிரதேச அரசு திருப்பிவிட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறி இருக்கிறது. மாநில பேரிடர் மீட்பு நிதியை சூறாவளி, வறட்சி, நிலநடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற இயறக்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மட்டுமே பயன்படுத்த முடியும். பேரிடர் மீட்பு நிதியை வேறு பணிகளுக்கு ஒதுக்க முடியாது.

முறையற்ற ஒப்பந்ததாரர்கள்
ஆனால் உத்தர பிரதேச அரசு நிதியை தவறாக திருப்பி விட்டுள்ளதாகவும் கும்பமேளாவுக்கு தேவையான நிதி மாநில பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சிஏஜி சுட்டிகாட்டியுள்ளது. கும்பமேளா கண்காணிப்பு அமைப்பு கூடாரங்கள் மற்றும் தளவாடங்களை கண்காணிப்பதில் தோல்வியடைந்தததால் ரூ .21.75 கோடி மதிப்பிலான தளவாடங்கள் காணாமல் போய் விட்டதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. ரூ 3.11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளில் முறையற்ற ஒப்பந்தக்காரர்களுக்கு பணி வழங்கி பல கோடிகள் மோசடி நடந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அனைத்திலும் மோசடி
தடுப்பு வேலிகள் (ரூ. 3.24 கோடி) மற்றும் ஃபைபர் ரைன்ஃபோர்ஸ் பிளாஸ்டிக் கழிப்பறை வேலைகள் (ரூ. 8.75 கோடி) ஆகியவற்றில் தவிர்க்கக்கூடிய செலவு தவிர ஒப்பந்ததாரர்களுக்கு அதிகப்படியாக ரூ .1.27 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக சிஏஜி பகீர் தகவல் தெரிவித்துள்ளது. மாநில அரசு கும்பமேளாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் முடிக்கவில்லை. இதன் காரணமாக கும்பமேளா தொடங்கும் போது 58 நிரந்தர மற்றும் 11 தற்காலிக இயற்கை வேலைகள் (15% பணிகள்) முடிக்கப்படவில்லை. இதன் மூலமும் பலகோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி கூறி இருக்கிறது.

பயன்படுத்தப்படவில்லை
மாநில உள்துறை துறையின் திறமையற்ற கொள்முதல் செயல்முறை காரணமாக, கும்பமேளாவின்போது வாங்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், பேக்கேஜ் ஸ்கேனர்கள், டிஜிட்டல் ரேடியோ எச்எஃப் செட்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் (மொத்த செலவு: ரூ.7.83 கோடி) கும்பமேளாவின்போது பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சிஏஜி கண்டுபிடித்துள்ளது. 2012 மற்றும் 2019 க்கு இடையில் உ.பி.யில் இந்திய-நேபாள எல்லை சாலை திட்டத்தின் (ஐஎன்பிஆர்பி) ஆயத்த கட்டம், திட்ட செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளையும் சிஏஜி வெளிப்படுத்தியது.

நிலம் கையகப்படுத்தும் பணி
317.57 கிமீ சாலைக்கு மீதமுள்ள 16 டிபிஆர்கள் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரை அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுளளது. UPPWD மூலம் உத்தரபிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் வேகம் மிகவும் தாமதமாக இருந்ததாக சிஏஜி கூறியுள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் வரை 27 சதவீத நிலம் (113.10 ஹெக்டேர்) இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என்று சிஏஜி தெரிவித்துளளது.












Click it and Unblock the Notifications