Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எலே பேதில போவ! ஜன்னல உடைச்சு..தண்ணிய ஊத்தி!பேசஞ்சர்களை பேஜாராக்கும் வடமாநிலத்தவர்! வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருவேணி சங்கமத்தில் 45 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்கள் கிடைக்காததால் ஏசி ரயில் பெட்டியின் கண்ணாடிகளை உடைப்பது, எமர்ஜென்சி ஜன்னல்களை உடைப்பது, பயணிகள் மீது தண்ணீரை ஊற்றுவது என அட்டகாசம் செய்து வருகின்றனர் வடமாநில ரயில் பயணிகள். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

maha kumbh mela 2025 Stampede train

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள், யோகிகள், சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடிக்கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக மகர சங்கராந்தி தினத்தில் மூன்று கோடி பேரும், மௌனி அமாவாசை அன்று எட்டு கோடி பேரும், வசந்த பஞ்சமி அன்று மூன்று கோடி பேரும் புனித நீராடி உள்ளனர். அது மட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு தலைவர்களும், இந்திய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் புனித நீராடி இருக்கின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பூடான் மன்னர், மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அம்பானி குடும்பத்தினர், கௌதம் அதானி குடும்பத்தினரும் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரயாக்ராஜிக்கு போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலாக இது கருதப்படுகிறது. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் பல நாட்கள் காத்துக் கிடக்கிறது. இந்த நிலையில் பிரயாக்ராஜிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கடல் அலை போல திரண்டுள்ளது.

சில இடங்களில் ரயிலில் இடம் கிடைக்காததால் இன்ஜினில் ஏறி பயணம் செய்ய முயன்ற சம்பவங்களும் நடந்தது. இந்த நிலையில் தற்போது சில ரயில் பணிகள் கொடூரமான அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இடம் கிடைக்காத விரக்தியில் ஜன்னலை உடைப்பது, தண்ணீரை ஊற்றுவது என கொடுமை செய்து வருகின்றனர். பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பிரயாக்ராஜ் வழியாக டெல்லிக்குச் செல்லும் சுகதந்திரா சேனாணி எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் பிடிக்க பயணிகள் போட்டி போட்டு முண்டியடித்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் அடிதடியும் நடந்தது.

ரயிலில் இடம் கிடைக்காத விரக்தியில் பயணிகள் சிலர் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பெட்டிகளில் பயணிகள் உட்புறமாக பூட்டிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவது, எமர்ஜென்சி கேட்டுகளை உடைப்பது, அவசரகால ஜன்னல்களை உடைத்து அதன் மூலம் உள்ளே ஏறிச் செல்வது என அத்துமீறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+