120 மணி நேர மெகா ரெய்டு.. ரூ 250 கோடி, பல கிலோ தங்கம் என நீண்ட லிஸ்ட்.. சோர்ந்துபோன அதிகாரிகள்
லாக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சுமார் 120 மணி நேரம் நீட்டித்த மெகா ரெய்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ரூ 257 கோடி ரூபாய் பணமும் பல முக்கிய சொத்து ஆவணங்களும் இதில் கைப்பற்றப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். திருமூர்த்தி பிராக்ரன்ஸ் என்ற நறுமண திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், அதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
இது தவிர வேறு சில நிறுவனங்களையும் இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தி வருகிறார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்.

மிரண்டு போன அதிகாரிகள்
இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்த்தாக கிடைத்த தகவலின் பெயரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான கான்பூர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாகப் பதுக்கி வைத்திருந்த பணத்தைக் கண்டுபிடித்தனர். எடுக்க எடுக்கப் பணம் வந்து கொண்டே இருந்ததால், அவர்களே மிரண்டு போய்விட்டனர். இதையடுத்து பாதுகாப்புக்காகத் துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

உதவிக்கு வந்த வங்கி அதிகாரிகள்
அங்கு 500 ரூபாய் நோட்டுகள் பார்சல் செய்யப்பட்டுக் கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கைப்பற்றிய வருமானவரித் துறையினர் பணத்தை இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். அது மாரத்தான் ஓட்டம் போலத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகளே சோர்ந்து போக, உதவிக்கு ஸ்டேட் வங்கி அலுவலர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் உதவியுடன் பணம் எண்ணும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றது.

257 கோடி ரூபாய்
இந்நிலையில், சுமார் 120 மணி நேரம் நீட்டித்த இந்த மாரத்தான் ரெய்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறையினரும் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகமும் இணைந்து நடத்திய இந்த அதிரடி சோதனையில் மொத்தம் 257 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 16 விலை உயர்ந்த சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் மும்பை, டெல்லி மட்டுமின்றி துபாயிலும் அவருக்குச் சொந்தமாக 2 சொகுசு வீடுகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

18 ரகசிய லாக்கர்
இத்துடன் அந்த லிஸ்ட் நின்று போய்விடவில்லை. பல கிலோ தங்க நகைகள், தங்க பிஸ்கட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். உத்தரப் பிரதேசத்தின் கனௌஜில் உள்ள அவரது வீட்டில் 18 ரகசிய லாக்கர்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு 500க்கும் மேற்பட்ட சாவிகளைக் கண்டுபிடித்த அதிகாரிகள். அதைக் கொண்டு லாக்கரை திறக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலதிபர் கைது
தந்தை சிகிச்சைக்காக டெல்லி சென்றிருந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ரெய்டு குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக கனௌஜ் திரும்பினார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 50 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்காகத் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார். அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர் என்பதால் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் மீதான இந்த நடவடிக்கை தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்குப் பின்னடைவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications